பக்கம்:வழிகாட்டி.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பாக்கள் 201

திருமுருகாற்றுப்படையை நக்கீரர் பாடி முடித்த வுடன், முருகன் எழுந்தருளி வந்து கற்கிமுகியென்னும் பூதத்தைக் கொன்று அவரையும் பிறரையும் விடுதலை செய்தான். அப்பால், 'நம்மைக் கிழவனென்று சொன் னாயே! என்று சொல்லி மறைந்தான். திருமுருகாற்றுப் படை, 'பழமுதிர்சோலை மலைகிழவோனே" என்று முடிகிறதல்லவா? என்றும் அழியாத இளமைக் காரனாகிய முருகனைக் கிழவனென்று தொனிக்கும் படிச் சொன்னது பிழைபோலும் என எண்ணி நக்கீரர். "குன்றம் எறிந்தாய்' என்று புதிய பாடலைப் பாட ஆரம்பித்து, 'என்றும் இளையாய் அழகியாய்' என்று பாடவே, முருகன் மகிழ்ந்து அருள் புரிந்து மதுரைக்குப் போகும்படி விடை கொடுத்தானாம். கிழவோன் என் பதற்கு உரிமையுடையவன் என்பது பொருள். கிழவன் என்பது முதியவன் என்ற பொருளில் வழங்குவது பிற் காலத்து வழக்கம், சங்க காலத்தில் கிழவன் என்ற சொல்லுக்கு அந்தப் பொருள் இல்லை. பக்தியுடை யோர் பலர் பாராயணம் பண்ணும்போது பொருளிலே மனத்தைச் செலுத்தாமலே ஓதி வந்திருக்கிறார்கள். யாரோ ஒருவருக்குக் கிழவோன் என்ற சொல் மனத்தை உறுத்தியிருக்கும். அவரிடம் முதல் முதலிலே தோற்றிய இந்தச் சிறு உறுத்தல் நாளடைவில் பெரிதாகிக் கடைசி யில் ஒரு புலவன் இந்தப் பாடல்களைப் பாடிக் கதை யையும் அமைத்துச் சமாதானப்படுத்துகிற வரையில் வந்திருக்க வேண்டும். முதியவன் என்ற பொருள் தொனிக்கும்படிக் கிழவன் என்னும் சொல் வழங்கு வதை அருணகிரிநாதரும் ஒரிடத்தில் குறிப்பித்திருக் கிறார். "முலைப்பாலுண்டு தொட்டிலிலே துரங்கி அழும் குழந்தையாகிய முருகனைக் குறிஞ்சிக் கிழவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/203&oldid=643979" இலிருந்து மீள்விக்கப்பட்டது