பக்கம்:வழிகாட்டி.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O2 வழிகாட்டி

னென்று உலகத்தார் சொல்கிறார்களே!' என்று வேடிக் கையாகக் கந்தரலங்காரத்திற் பாடுகிறார். "திருந்தப் புவனங்கள் ஈன்றபொற் பாவை திருமுலைப்பால் அருந்திச் சரவணப் பூந்தொட்டில்

ஏறி அறுவர்கொங்கை விரும்பிக் கடலழக் குன்றழச் சூரழ விம்பிஅழும் குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென்

றோதும் குவலயமே." இந்த வெண்பாக்கள் உள்ளம் உருக்குவனவாக அமைந்திருப்பதனால் நக்கீரரே பாடியவை என்று. சொல்ல வேண்டும் என்ற ஆசை பக்தர்களுக்குத் தோன்றியது போலும்.

குன்றம் எறிந்தாய் குரைகடலில் சூர்தடிந்தாய் புனதலைய பூதப் பொருபடையாய் - என்றும் இளையாய் அழகியாய் ஏறுர்ந்தான் ஏறே உளையாய்என் உள்ளத் துறை. கிரவுஞ்ச மலையை வேலால் எறிந்து அழித்த வனே, முழங்கும் கடலிலே புகுந்து ஒளித்த சூரபது மனைச் சங்காரம் செய்தவனே, சிவந்த தலையை யுடைய பூதங்களாகிய போர்புரியும் சேனையை உடைய வனே, என்றும் இளமையை உடையவனே, என்றும் அழகாக இருப்பவனே, இடபத்தை வாகனமாகக் கொண்டு உலாவரும் பர்மசிவனுடைய ஆண் சிங்கம் போன்ற குமரனே, நீ என்றும் என் உள்ளத்திலே தங்கி யிருப்பவனாக வாசம் செய்வாயாக. (1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/204&oldid=643981" இலிருந்து மீள்விக்கப்பட்டது