பக்கம்:வழிகாட்டி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 வழிகாட்டி

யால் மூடப்பட்ட உயர்ந்த கிரவுஞ்சகிரியின்மேல் பட்டு

ஊடுருவும்படியாகப் பிரயோகம் செய்த ஒப்பற்ற நினது

வேலாயுதத்தை, இன்னும் ஒருமுறை என்னுடைய

துன்பமாகிய மலை பட்டு உருவும்படியாகவும் பிர

யோகம் செய்வது பொருத்தமாக இருக்கும். (4)

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக் கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்தி வாழ்வே.

பன்னிரண்டு திருக்கைகளோடு கோலங்கொண்ட அப்பனே, தேவர்களுடைய கொடிய பாவங்களைப் போக்கி அருள் செய்யும் வேலாயுதக் கடவுளே, செந்து ரில் எழுந்தருளியிருக்கும் பெருமானே, அடியேன். உன்னையன்றி வேறு ஒருவரையும் எனக்குத் துணை யாக நம்பமாட்டேன்; வேறு ஒருவரையும் வழிபட மாட்டேன். (5)

அஞ்சு முகந்தோன்றின் ஆறு முகந்தோன்றும் வெஞ்சமரில் அஞ்சலென வேல்தொன்றும் - நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகாவென்று ஓதுவார் முன். முருகா என்று எப்போதும் ஒதுகின்ற அடியார் களுக்கு முன்னாலே, அவர்கள்பால் பயப்படுகின்ற முகம் காணப்படின் முருகனுடைய ஆறுமுகமும் அதனைப் போக்கத் தோன்றும்; கொடிய போரில் பயப் படாதே என்று வேலாயுதம் தோன்றும்; மனத்தில் ஒரு . முறை தியானித்தாலும் முருகனுடைய இரண்டு திரு வடிகளும் தோன்றும். (6)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/206&oldid=643986" இலிருந்து மீள்விக்கப்பட்டது