பக்கம்:வழிகாட்டி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பாக்கள் 205

முருகனே செந்தி முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான். முருகா, திருச்செந்தூராண்டவனே, திருமால் மரு கனே, சிவகுமாரனே, துதிக்கையை முகத்திலே உடைய விநாயகருக்கு இளவலே, அடியேன் உன்னுடைய தண் டையை அணிந்த திருவடியையே பற்றுக்கோடாக நம்பி எப்போதும் கும்பிடுவேன். (7)

காக்கக் கடவிய நீ காவாது இருந்தக்கால் ஆர்க்குப் பரமாம் அறுமுகவா - பூக்கும் கடம்பா முருகா கதிர்வேலா நல்ல இடங்காண் இரங்காய் இனி. ஷண்முகா, மலர்ந்த கடம்ப மாலையை அணிந்த வனே, முருகா, சுடர்விடும் வேலாயுதக் கடவுளே, என்னைக் காப்பாற்றும் கடமையையுடைய நீயே காவாது இருந்து விட்டால், என்னைக் காக்கும் பொறுப்பு யாருக்கு உரியதாகும்? நீ இரங்கி அருளு வதற்கு ஏற்ற பாத்திரமாகிய நல்ல இடம் இது. இனி மேல் கருணை புரிவாயாக. (8)

பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்றன் பாதம் கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு - சுருங்காமல் ஆசையால் நெஞ்சே அணிமுருகாற் றுப்படையை பூசையாய்க் கொண்டே புகல். நெஞ்சே, திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளியிருக் கும் பன்னிருகைப் பெருமாளாகிய முருகன் திருவடி களைக் கரங்குவித்துக் கும்பிட்டுக் கண் குளிரும்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/207&oldid=643990" இலிருந்து மீள்விக்கப்பட்டது