பக்கம்:வழிகாட்டி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வழிகாட்டி

மணிமாலையிலே சிறியதும், பெரியதும், கரியதும், செவ்வியதும், பச்சையானதும், மஞ்சளானதுமாகிய பல வகை மணிகளினிடையே ஊடுருவிச் சென்று அவற்றை மாலையாகக் கோர்த்து நிற்கும் இழைபோல, குறவரும், பேய்மகளும், அந்தணரும், முனிவரும், தேவரும், மும் மூர்த்திகளும் பாராட்ட, அவர்களுக்குக் குறைதீர்க்கும் தெய்வமாய், வீரமும் காதலும் எழிலும் குணமும் அன்பும் அருளும் வளர்ச்சிபெற அருளும் தெய்வமாய், எல்லாவற்றிற்கும் ஆதாரமாகக் கோத்து நிற்கும் பெரும் பெயர் இயவுளாகி இலங்குபவன் முருகன்.

அவனைப் பேய் மகளைப்போலப் பசி தீர வாழ்த்து வாரும், சூரர மகளிரைப் போல அழகும் இன்பமும் பெற வாழ்த்துவாரும், தேவர்களைப் போலப் பகை நீங் கவும் பதவி பெறவும் வாழ்த்துவாரும் முனிவரைப் போல் உபதேசம் பெற வாழ்த்துவாரும், ஞானியரைப் போலப் பெறலரும் பரிசிலாகிய முத்திபெற வாழ்த்து வாரும் ஆக வேண்டுவோர் வேண்டியாங்கு வழிபடுவர்.

இந்த நிலையில் முருகனை வைத்துக் காட்டும் நக்கீரர் தம் காலத்தில் வழங்கி வந்த புராண வரலாறு கள் சிலவற்றை அங்கங்கே குறித்துச் செல்கிறார். முருகன் அக்கினியால் தாங்கப் பெற்றவன், அறுவர் பயந்த செல்வன், சரவணப் பொய்கையில் தவழ்ந்தவன், நான்முகனைத் தண்டித்தவன், சூரனைச் சங்காரம் செய் தவன், மாமரத்தைத் தடிந்தவன், மலைமகள் மகன்,

தேவர்படைத்தலைவன் என்னும் செய்திகளை இந்நூலிற் கானலாம்.

முருகனுடைய இயல்புகளை நக்கீரர் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாகச் சொல்லி ஈடுபடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/28&oldid=643582" இலிருந்து மீள்விக்கப்பட்டது