பக்கம்:வழிகாட்டி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் 27

வார். அவன் வீரத்தைப் பலபடியாகப் பாராட்டுவார். கருணைத் திறத்தைப் புலப்படுத்துவார். அழகை விரிப் பார். ஒளியைப் புகழ்வார். இன்பநிலையை எடுத்தோ துவார். வள்ளன்மையை வாழ்த்துவார். தலைமையைச் சாதிப் பார். கூத்தைக் குறிப்பார். புலமை யையும், இளமையையும், புகழையும், காதலையும், கொற்றத் தையும், உரிமையையும், செல்வத்தையும், வலிமையை யும், எல்லையில்லாப் பெருமையையும், அன்புடை மொழியையும் குறிப்பித்துச் செல்வார்.

அவர் காட்டும் முருகனுக்குக் கழலும் தொடியும் குழையும் முடியும் ஆபரணங்கள். கலிங்கமும், துகிலும் கச்சும் ஆடைகள். கடம்பும் ஆரமும் மாலைகள். காந் தளும் வெட்சியும் கண்ணிகள். வேலும் வில்லும் அங் குசமும் கேடகமும் ஆயுதங்கள். சேவலும் மயிலும் கொடிகள். பிணிமுகமும் மயிலும் தகரும் வாகனங்கள். வள்ளியும் தேவயானையும் மனைவிமார்.

அவன் திருவுருவத்துக்குச் சூரியன் உவமையா கிறது. அவன் வீரக்கைக்கு இடியேறு ஒப்பாகிறது. அவன் திருமுகத்துக்குத் திங்களும், குழைகளுக்கு நட் சத்திரமும் உபமானமாகின்றன.

அர்ச்சனை செய்வதற்கு ஏற்றபடி அழகான பல திரு நாமங்களை இந்நூலில் எடுத்துரைத்திருக்கிறார் புலவர். முருகன் என்ற பெயருக்கு மிக்க சிறப்பளிக்கிறார். 'அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக' என்கிறார். 'அறுவர் பயந்த ஆறமர் செல்வ, ஆல்கெழு கடவுட் புதல்வ, மலைமகள் மகனே' என்பன போலப் பல திருநாமங்களைக் கூறுகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/29&oldid=643583" இலிருந்து மீள்விக்கப்பட்டது