பக்கம்:வழிகாட்டி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிகாட்டி 35

கூத்தர் என்னும் கலைஞர்கள் பழுத்த மரத்தைத் தேடும் வெளவால்களைப் போல, எங்கே கலைநயம் தேர்ந்து பாராட்டி ஆதரிக்கும் உபகாரி இருக்கிறான் என்று தேடிக் கொண்டு ஊர் ஊராய்ச் செல்வார்கள். அவர் களுக்கு எல்லா இடமும் சொந்த ஊர்; எல்லாரும் உற வினர். 'யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற மனோ பாவத்தோடு அவர்கள் தமிழ்நாடு முழுவதும் தங்கள் வீடாக எண்ணி உலவி வந்தார்கள்.

எப்போதும் பிரயாணம் செய்துகொண்டு வரும் இந்தக் கலைஞர்கள் பிரயாண நூல் எழுதினால் எப்படி இருக்கும் சாதாரண மனிதன் தன் அநுபவத்தைச் சொன்னாலே நாம் ஆவலோடு கேட்கிறோம். கலைஞன் ஒருவன் சொன்னால் பின்னும் ஆர்வத்தோடு கேட்க லாம் அல்லவா? பழங்காலத்தில் இவர்கள் எல்லோரும் எழுதாவிட்டாலும் புலவர்கள் பிரயாண நூல்கள் எழுதி யிருக்கிறார்கள். பாட்டும் கூத்தும் பயிலும் கலைஞர்கள் பாடுவார்கள்; ஆடுவார்கள். புலவர்கள் தங்கள் அநுப வத்தையும் மற்றவர்கள் அநுபவத்தையும் சேர்த்துக் கவி பாடுவார்கள்.

பழங்காலப் புலவர்கள் இயற்றிய பிரயாண நூல் களுக்கும் இக்காலத்துப் பிரயாண நூல்களுக்கும் பல வகையில் வேற்றுமை உண்டு. முதலாவது, பழைய பிர யாண நூல்கள் செய்யுளாக இருக்கின்றன. இக்காலத் தவை உரைநடையில் உள்ளன. பழைய பிரயாண நூல்கள் நேரடியாகப் பிரயாணத்தைப் பற்றிச் சொல்லாது, குறிப்பிட்ட ஊருக்குப் போகும்வழி, அங்கே உள்ள காட்சிகள் என்பன இரண்டு வகை நூல்களிலும் காணப் பட்டாலும், பழந்தமிழ்ச் செய்யுட்களிலே நூலின் முக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/37&oldid=643592" இலிருந்து மீள்விக்கப்பட்டது