பக்கம்:வழிகாட்டி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வழிகாட்டி

பிரயாணம் செய்தாலும் இடைவழியிலே கண்ட காட்சி ஒன்றும் மனத்தில் பதிவதில்லை.

பண்டைக் காலத்தில் யாத்திரை செய்வதென்பதை ஆத்மார்த்தமான செயலாக நினைத்தனர். தல யாத்திரை, தீர்த்தயாத்திரை இரண்டும் சித்த சுத்தியை அடைவதற் குரிய சாதனங்களாகக் கருதினர்.

"மூர்த்திதலம் தீர்த்தம் முறையாத் தொடங்கினார்க்கு வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே” என்று தாயுமானவர் சொல்லியிருக்கிறார். யாத்திரை செய்பவர்கள் நிதானமாக ஒவ்வோர் இடமாகச் சென்று தங்கி மேலே தொடர்வார்கள். இதனால் மக்களையும் இடங்களையும் பற்றிய பல செய்திகள் அவர்கள் உள்ளத்தே தேங்கி நிற்கும். அந்தக் காலத்தில் பல ஊர் சுற்றினவர்களிடமிருந்து மக்கள் பலபல செய்திகளை ஆவலோடு கேட்டுத் தெரிந்து கொள்வார்கள்.

மிகப் பழங்காலத்துத் தமிழ் நாட்டில் சில வகை யினர் எப்போதும் யாத்திரை செய்வதையே தங்கள் தொழிலாகக் கொண்டிருந்தார்கள். முக்கியமாகக் கலைத் தொடர்புடையவர்கள் தங்கள். ஊரென்று ஒன்றை உடையவர்களாக இருந்தாலும், பெரும்பாலும் தமிழ்நாடு முழுதும் யாத்திரை செய்து கொண்டே இருந் தார்கள். ரசிகர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடிக் கண்டு பிடித்து அவர்களை வலிய அணுகித் தங்கள் கலைத்திறத்தைக் காட்டி வந்தார்கள். இயற்றமிழை அறிந்து கவிஞராக விளங்கிய புலவர்கள், இசைக் கலை யில் தேர்ந்த பாணர், அவருள் பெண்பாலராகிய விறலி யர், வேடம் புனைவதில் வல்ல பெருநர், நாடகமாடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/36&oldid=643591" இலிருந்து மீள்விக்கப்பட்டது