பக்கம்:வழிகாட்டி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிகாட்டி 37

'கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்னறிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்." (உறழ - ஒருவரை ஒருவர் சந்திக்க. வளம் - செல்வம். அறிவுறீஇ - தெரியப்படுத்தி, பயன் எதிர - பிரயோ சனத்தை அடையும்படியாக.)

தொல்காப்பியம் இப்போது கிடைக்கும் தமிழ் நூல் களுள் மிகப் பழமையானது. அதில் இந்த இலக்கணம் கூறப் பெறுவதனால், அதற்கு முன்பே பல ஆற்றுப் படைகள் தமிழில் வழங்கியிருக்க வேண்டும் என்று தோற்றுகிறது. ஆயினும் அவற்றில் ஒன்றேனும் இப் போது கிடைக்கவில்லை.

தொல்காப்பியத்துக்குப் பிறகு கடைச்சங்ககாலத் தில் தொகுக்கப்பெற்ற நூல்களில் ஆற்றுப்படைச் செய்யுட்கள் பல உள்ளன. பத்துப்பாட்டு என்ற தொகை யில் பத்து நூல்கள் இருக்கின்றன. அந்தப் பத்தில் பாதி ஆற்றுப்படைகள். திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப் படை, கூத்தராற்றுப்படை, (மலைபடுகடாம்) என்னும் ஐந்தும் அதன் கண் உள்ளன. கடைச்சங்க நூல்களைச் சொல்லும்போது பத்துப்பாட்டை முதலில் வைத்துச் சொல்வது வழக்கம். ஆற்றுப்படைகள் பல உள்ள பெருமையே அத்தொகையை முதலாவதாக எண்ணச் செய்ததுபோலும்.

பத்துப்பாட்டில் முதலில் நிற்பது திருமுருகாற்றுப் படை. திரு என்ற அடை பிற்காலத்தில் வந்ததாக இருக் கலாம். முருகாற்றுப்படை என்பது அதன் இயற்பெயர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/39&oldid=643594" இலிருந்து மீள்விக்கப்பட்டது