பக்கம்:வழிகாட்டி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வழிகாட்டி

முருக - முருகன். முருகனிடத்தில் செல்லும்படி வழி காட்டும் நூல் என்பது பொருள். வழிகாட்டுபவர் நக்கீரர்; செல்ல எண்ணுபவன் புலவன். பிரயாணத்தை யார் மேற்கொள்கிறார்களோ அவர்களுக்கு வழிகாட்டுவதா கையால் அவர்கள் பெயரால்தான் பெரும்பாலும் ஆற் றுப்படை வழங்கும். 'யாத்திரிகர்களுக்கு வழிகாட்டி", 'மாணவர்களுக்கு வழிகாட்டி' என்ற பெயர்களோடு புத்தகங்கள் வழங்குவதை இக்காலத்தில் பார்க்கி றோமே. பாணனுக்கு வழிகாட்டினால் அது பாணாற்றுப் படையாகும். கூத்தருக்கு வழிசொன்னால் கூத்தராற்றுப் படையாகும். திருமுருகாற்றுப்படை புலவருக்கு வழி காட்டியாக இருப்பதால் புலவர் ஆற்றுப்படை என்ற பெயரோடு வழங்க வேண்டும். பழைய காலத்தில் இருந்த உரையாசிரியர்களிற் சிலர், இந்நூலைப் புலவ ராற்றுப்படையென்றே குறித்துச் செல்கின்றனர்.

ஆயினும் முருகக் கடவுளின் புகழைச் சொல்வ தென்று, பெயரைக் கேட்ட மாத்திரத்திலே தெரிய வேண்டும் என்ற நினைவினால் நக்கீரர் இதற்கு முரு காற்றுப்படை என்று பெயர் வைத்திருக்கலாம்.

உலகில் உள்ள ஒருவனிடத்திற்குப் போகவேண்டு மானால் வழிகாட்டலாம். கடவுள் உள்ள இடத்துக்கு வழி காட்டுவது எப்படி? அவர் எங்கும் நிறைந்தவரா யிற்றே! உண்மை தான். ஆனாலும் நாம் கடவுளை வணங்கக் கோயிலுக்குச் செல்கிறோம். தலங்களுக்குப் போகிறோம். எங்கும் நிறைந்த கடவுளின் நினைவு அந்த இடத்திலே அதிகமாக உண்டாகிறது. மற்ற இடங் களில் வேறு காரியங்களுக்கிடையே கடவுளை நினைக்க வேண்டும். கோயில்கள் கடவுளை நினைப்ப தற்காகவே உரிய தனியிடங்களாக இருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/40&oldid=643595" இலிருந்து மீள்விக்கப்பட்டது