பக்கம்:வழிகாட்டி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிகாட்டி 39

ஆகவே, நக்கீரர் முருகப் பெருமான், உள்ள இடங்கள் இவை என்று தலங்களைச் சொல்கிறார். எங்கும் இருக் கின்றான் என்பதையும், முருகன் எத்தகையவன் என் பதையும் விரிவாகச் சொல்லுகிறார்.

முருகவேள் எழுந்தருளியிருக்கும் இடங்களில் முக் கியமானவை ஆறு என்று கருதி அவற்றைப் பற்றிய செய்திகளை நக்கீரர் சொல்கிறார். மதுரைக்கு அருகில் உள்ள திருப்பரங்குன்றம், திருச்செந்தூராகிய திருச் சீரலைவாய், பழனியாகிய திருவாவினன்குடி, சுவாமி மலையென்று வழங்கும் திருவேரகம், எல்லா மலை களுமாகிய குன்று தோறாடல், அழகர்மலை யென்று இன்று வழங்கும் பழமுதிர்சோலை என்ற ஆறையும் ஆறுபடை வீடுகள் என்று கூறுவர். முருகவேள் பெரிய அரசனைப் போன்றவனாதலின் அவன் தன்னுடைய பரி வாரங்களுடன் தங்கியிருக்கும் இடங்கள் அவை என் பதை அப்பெயர் குறிக்கின்றன. இயற்கையான அரண் மனை இருக்கவும் அங்கங்கே தங்கிப் பாடி அமைக்கும் பேரரசனைப்போல முருகவேளும் எங்கும் நிறைந்தவ னாக இருப்பினும் இந்த ஆறிடங்களிலும் தங்கித் தன் பால் வருபவர்களுக்கு அருள் செய்கிறான்.

முருகனிடத்திலே செல்பவனுக்கு என்ன பயன் கிடைக்கும்? அழியாத பெருஞ் செல்வமாகிய மோட் சந்தான் பயன். தல தரிசனம் செய்தால் முக்தி யின்பம் கிடைக்குமென்று புராணங்கள் சொல்கின்றன. அதைப் போலவே நக்கீரரும் முருகன் வாழும் தலங்களுக்குச் சென்று வழிபட்டால் வீடு பெறலாம் என்று சொல் கின்றார். நக்கீரர் சொல்லும் முறை அழகானது; சுவைப் பதற்குரியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/41&oldid=643596" இலிருந்து மீள்விக்கப்பட்டது