பக்கம்:வழிகாட்டி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் 59

நறுமணம் வீசும் காட்டில், இருள் உண்டாகும்படியாகச் செறிந்த பருத்த அடி மரத்தையுடைய செங்கடம்பினது உருளுகின்ற குளிர்ந்த மாலை புரளுகின்ற திருமார்பை உடையவன். கார்கோள் - கடல், கம - நிறைவு. வாள்ஒளி. உறை - துளி. பெயல் - மழை பெய்வது. தலை இய - பெய்த பொதுளிய - செறிந்த பராரை - பரு - அரை + பருத்த அடிமரம். மராஅம் - செங்கடம்பு)

தேவயானையோடு மணவாளப் பெருமாளாக வீற்றிருக்கும் கோலத்தைச் சொன்னபோது, அதனோடு சேர்ந்து போகத்துக்குரிய மாலையும் நினைவுக்கு வருவது இயல்புதானே?

காந்தளங் கண்ணியான்

முருகன் தன் திருமார்பில் போகத்துக்குரிய கடம்ப மாலையை அணிவதோடு திருமுடியில் காந்தளாலாகிய கண்ணியை அணிந்திருக்கிறான். காந்தள் முருகனுக்கு உரிய அடையாள மாலை. ஒவ்வோர் அரசனுக்கும் ஒவ் வோர் அடையாள மாலை உண்டு. சோழனுக்கு ஆத்தி யும், பாண்டியனுக்கு வேம்பும், சேரனுக்குப் பனையும் அடையாள மாலைகள். முருகன் அடையாள மாலை யாகச் சென்னியில் தண்ணிய காந்தட் கண்ணியை மலைந்திருக்கிறான்.

குறிஞ்சி நிலத்தில் வளரும் பூ, காந்தள். முருகன்

அணிந்த காந்தளங் கண்ணி மலைச் சாரற் சோலையிலே

உண்டானது. அந்தச் சோலை சாதாரணமானதா? தெய்வ மகளிர் ஆடிப்பாடி இன்புறுவதற்குரிய தெய்வத்தன்மை யும் இயற்கை யெழிலும் பொருந்திய சோலை அது. அதில் ஆடும் அரசமகளிருடைய அழகை என்ன வென்று சொல்வது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/61&oldid=643616" இலிருந்து மீள்விக்கப்பட்டது