பக்கம்:வழிகாட்டி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 வழிகாட்டி

கடம்ப மாலையான்

கடலிலுள்ள நீரை நிறைய முகந்து கருவுற்றுக் கரு நிறம் பெற்று வானத்திலே செல்லும் மேகம் பெரிய பெரிய துளிகளைச் சிதறுகிறது. சந்திரனுடைய ஒளியும் சூரியனுடைய கதிர்களும் வீசி இருளைப் போழும் வானத்திலிருந்து கார் காலத்து மேகம் முதல் முதலாக மழை பொழிகிறது. பூமி குளிர்ந்து மரங்களெல்லாம் தழைக்கின்றன. குளிர்ச்சியும் மணமும் நிரம்பிய காடு நன்றாகத் தழைத்து அடர்ந்து விளங்குகிறது. அந்தக் காட்டினிடையே நெடுங்காலமாக வளர்ந்து பருத்த அடியையும் இருள் உண்டாகும் படியாகச் செறிந்த தழைப்பரப்பையும் உடைய செங்கடம்பு மரம் நிற்கிறது. மாலையைப் போலத் தொங்கும் அதன் மலர்கள் தேர் உருளை போல இருக்கின்றன. அவற்றை எடுத்து நூலிலே கோத்தால் உருண்டு கொண்டே இருக்கும். அப்படி உருளுகின்ற செங்கடப்பம் பூவாலாகிய தண்ணிய தார் அங்கும் இங்கும் புரளும் திருமார்பை உடையவன் முருகன். அந்த மாலை போகத்துக்குரிய மாலை. இன்பம் நுகரும் காலத்தில் அணிந்து கொள்ளும் அலங்காரப் பொருள் அது.

கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை

வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறறித்

தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்து

இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து

உருள்பூந் தண்டார் புரளும் மார்பினன். (கடலை முகந்த நிறைந்த கருப்பத்தையுடைய கரிய மேகமானது ஒளியால் போழப்படும் வானத்தில் வளவிய நீர்த்துளியைச் சிதறி முதல் மழையைப் பெய்த குளிர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/60&oldid=643615" இலிருந்து மீள்விக்கப்பட்டது