பக்கம்:வழிகாட்டி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் 57

முன்னே சொன்ன திருவடிகளையும் திருக்கரங்களையும்

உடையவன், அந்தக் கற்பு மணப்பிராட்டியின் கணவன்;

எரி வலம் வந்து கைப்பிடித்த நாயகன். மறுவில் கற்பின் வாணுதல் கணவன்:

(குற்றம் இல்லாத, கற்பு மணத்தைப் பெற்ற ஒளி பொருந்திய நெற்றியையுடைய தேவ யானைக்குக் கணவன். மறுவில் வாணுதல், கற்பின் வானுதல் என்று கூட்டிப் பொருள் செய்ய வேண்டும்.)

நக்கீரர் மிக அழகாக முருகனை நமக்குக் காட்டு கிறார். ஒரு பெரிய ஜோதிப் பிழம்பைக் காட்டி அதனூடே அவன் காலையும் கையையும் காட்டி அவனுக்கருகே தேவ யானையையும் எழுந்தருளச் செய்து, "இதோ முருகன்’ என்று கூறுகிறார். .

முதல் முதலில் திருப்பரங்குன்றத்தைப் பற்றிய பகுதி திருமுருகாற்றுப் படையில் வருகிறது. அக் குன்றத்தில் தெய்வயானையம்மை யின் திருமணம் நிகழ்ந்ததாகப் புராணம் கூறும். தெய்வயானையம்மை யின் திருமணத்தின் போது வள்ளியம்மை முருகனை அடையவில்லை. ஆகவே திருப்பரங்குன்றத்துக்கு முரு கனை நினைக்கும்போது தேவசேனாதிபதியாக நினைப் பது பொருத்தம் அல்லவா?

'சூரியன் கடலிலே எழுந்தாற் போன்ற ஜோதியை யும் அடியாருக்குப் பாதுகாப்பாகி அஞ்ஞானத்தைப் போக்கும் திருவடிகளையும் பகைவரை அழிக்கும் திருக்கரங்களையும் உடையவனாகிய தேவசேனாபதி: என்று முதல் ஆறு அடிகளிலே நக்கீரர் நமக்கு முருகக் கடவுளை அறிமுகப்படுத்துகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/59&oldid=643614" இலிருந்து மீள்விக்கப்பட்டது