பக்கம்:வழிகாட்டி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 வழிகாட்டி

தன்பாலும் தன் அடியார்பாலும் யாரேனும் எதி ரிட்டுப் போராட வந்தால் முருகன் கைகள் அவர்களை அடியோடு தேய்த்துவிடும்; நசுக்கி நிர்மூலமாக்கி விடும். இடியைப்போலப் பயங்கரமானவை அவை பகைவருக்கு பரந்த அந்தக் கைகள் முருகன் வலிமைக்கு அடையாளங்கள்.

கருணை பில்கும் திருவடியும் வீரம் திகழும் தடந் தோள்களும் கண்டோம். இந்த அடிகளோடும் தடக்கை களோடும் எழுந்தருள்பவன் யார்? கருணையே வடிவான தேவயானை அம்மையாரின் கணவன்.

தன் அடியில் புகலடைந்த தேவர்களுக்கு அடைக் கலந் தந்து, இடிபோன்ற கைகளால் சூரன் முதலி யோரை அழித்த முருகவேளுக்கு அமரர் வேந்தன் மகிழ்ந்து மணம் செய்து கொடுத்தவள் தேவயானை அம்மை. அடியார்க்குப் புகலாகிய முருகனுடைய சேவடியையும் பகைவரை அழிக்கும் அவனுடைய தடக்கைகளையும் நினைத்தபோது, தொடர்ந்து தேவ யானை திருமணம் நினைவுக்கு வருகிறது.

தமிழர், கல்யாணம் செய்து கொள்வதற்குமுன் காதல் பூண்டொழுகுவதைக் களவொழுக்கம் என்றும், மணம் புரிந்த பிறகு இன்பவாழ்க்கை நடத்துவதைக் கற் பொழுக்கம் என்றும் கூறுவர். இந்த இரண்டு வகை ஒழுக்கத்தையும் தமிழர் தெய்வமாகிய முருகன் தன் இரண்டு தேவியர்பால் காட்டினான். வள்ளியெம்பிராட்டி யிடம் களவு மணத்தையும் தேவயானையின்பால் கற்பு மணத்தையும் நிகழ்த்தினான். தேவயானை கற்பு மணத் தாற் பெற்ற தேவி. குற்றமற்றவள்: கற்புக்கு உறைவிட மானவள், ஒளி விளங்கும் நெற்றியை உடையவள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/58&oldid=643613" இலிருந்து மீள்விக்கப்பட்டது