பக்கம்:வழிகாட்டி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் - 55

திருப்பாதங்கள் - இவற்றையுடைய முருகன் என்று சொல்ல வருகிறார்.)

மனிதர்கள் துன்பம் வேண்டாமென்றும் இன்பம் வேண்டுமென்றும் விரும்புவார்கள். அவர்களுடைய துன்பங்களுக்கெல்லாம் காரணமாகிய மதனை (அஞ்ஞா னத்தை) நீக்கி, மேலும் துன்பம் வராமல் பாதுகாக்கும் இயல்பு முருகன் திருவடிகளுக்கு இருக்கின்றது. உறுநர் என்பதற்குத் துன்பப்படுவர் என்றும், அடைபவர் என்றும் இரண்டு பொருள் உண்டு. இங்கே இரண்டையும் இணைத்து, துன்பப்பட்டுப் புகல் தேடித் தம்மை அடை பவர் என்று பொருள் கொள்ளலாம். மதன் என்பதற்கு அழகென்றும் பொருளுண்டு. அழகுடைய தாளென்றும் சொல்லலாம்.

ஜோதிப் பிழம்பாக முருகனைக் கண்ட கண் களுக்கு அவன் திருவடிகள் இப்போது புலனாகின்றன. நக்கீரர் அவற்றின் பெருமையைப் புலப்படுத்துகிறார்.

வருவாரைப் பாதுகாக்கும் தன்மை தாளுக்கு இருப் பதற்குக் காரணம், அவர்களுக்கு வரும் ஏதத்தைப் போக்கும் வலிமை அந்த தாளை உடையவனுக்கு இருப்பதேயாகும். எல்லோரும் பணிந்து புகலடையும் பெருமையை அவன் தாள்கள் காட்டுகின்றன. அப்படிப் புகலடைந்தால் அவருடைய துன்பம் போக்கும் திறலை அவன் கைகள் கொண்டிருக்கின்றன.

செதுநர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை (எதிரிட்டுப் போர் செய்வாரை அடியோடு அழிப்பனவும் இடியைப் போலக் கடுமையும், தப்பாமல் கொல்லும் தகைமை யும் உடைய விசால மான கைகள்இவற்றையுடைய முருகன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/57&oldid=643612" இலிருந்து மீள்விக்கப்பட்டது