பக்கம்:வழிகாட்டி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வழிகாட்டி

முருகன் நெடுந்துரத்தில் எழுந்தருளும்போதே நீல ஒளிபரப்பும் செவ்வொளிப் பிழம்பும் தோன்றுகின்றன. இந்த ஒளியைக் காணும்போதே உள்ளம் உவக்கின்றது. புகழவேண்டுமென்ற தோற்றம் உண்டாகிறது.

முருகன் அருகில் அணைகின்றான்; கண்கள் கதுவிக் காணும் அளவில் வருகின்றான். அவனுடைய திரு வடிகள் அப்போது புலனாகின்றன. இறைவனிடம் அணுகும் அன்பர்கள் தமக்குப் பற்றுக்கோடாகிய தாளையே கண்டு இன்புறுவார்கள். தலை வணங்கி ஆணவம் ஒழிந்து பிறவிக் கடலுக்குத் தோணியென்ற ஆர்வத்தோடு இந்தத் திருவடியையே பற்றிக் கொள்வ தனால், ஆண்டவனைக் காட்டிலும் அவன் அடிகள் சிறந்தன என்று கூடச் சொல்லியிருக்கிறார்கள்.

“நின்னிற் சிறந்தநின் தாளினையவை' என்பது பரிபாடல்.

அன்புடன் காணுவாருக்கு முதலில் தோற்றுவன முருகன் திருவடிகள். அவற்றின் இயல்பு என்ன? தம்பால் வந்து புகல் அடைவோர்களைப் பாதுகாக்கும் இயல் புடையவை அவை. வாடி அடைந்தாருக்கு அடைக் கலத் தானமாதலின் அவை அன்பர்களுக்குச் சிறந்தன. வன்மையுடைய பாதங்கள் அவை; அஞ்ஞானத்தை உடைக்கும் வன்மையை உடையவை. யார் அந்தத் திரு வடிகளைத் தியானிக்கிறார்களோ அவர்களுடைய அஞ் ஞானம் ஒடிவிடும்; குறையில்லாத பாதுகாப்பாக அவை உதவும்.

உறுநர்த் தாங்கிய மதன்உடை நோன்றான்.

(தம்பால் வந்தவர்களைப் பாதுகாப்பனவும் அறி யாமையைப் போக்குவனவுமாகிய வலிமையையுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/56&oldid=643611" இலிருந்து மீள்விக்கப்பட்டது