பக்கம்:வழிகாட்டி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் 53

(உலகத்தில் உள்ள உயிர்களெல்லாம் மகிழும்படியாக மேருவுக்கு வலப்பக்கமாக எழுந்து சுற்றுவதும் பலரால் புகழப் பெறுவதும் ஆகிய சூரியன் கீழ்கடலிலே தோன்றினாற் போல, நீக்கமின்றி விளங்குவதும் நெடுந் தூரத்தும் வீசுவதுமாகிய ஒளி-இதை உடைய முருகன் என்று சொல்ல வருகிறார்.)

முருகன் எழுந்தருளும்போது அவனுடைய திரு வுருவம் தெளிவாகத் தெரிவதற்கு முன்பு ஒரே ஜோதிப் பிழம்பு தெரிகிறது. நீல மயிலின் நீல ஒளிப் பரப் பினிடையே சிவந்த ஒளிப்பிழம்பாக முருகன் தோன்று கிறான். அவன் ஒளி நெடுந்துரம் வீசுகிறது. இந்தச் சூரியன் செல்ல இயலாத சேணிலும் அவ்வொளி சென்று வீசுகிறது. அன்பர் அகத்துக்குள்ளே புகுந்து சுடர்விடுகிறது. இடைவிடாமல் சுடர்கிறது. சூரியன் உலகம் உவப்பவும் பலரும் புகழவும் உதயமாவது போல முருகனும் உலகம் உவப்பவும் பல சமயத்தினரும் புகழவும் எழுந்தருளுகிறான். பால சூரியன் அவன்; இள முருகன் இவன். கண்கண்ட தெய்வம் அவன்; இவனும் கலியுக வரதன். பார் புகழும் இயல்பும் அவன் பால் உண்டு; இவனும் பலரும் புகழும் சமரச தெய்வம்.

நீல மயில் தோகை விரித்த பரப்பினிடையே செம் மேனி படைத்து வீற்றிருக்கும் தோற்றத்தை நக்கீரரைப் போலவே வேறு புலவர்களும் பாராட்டி இன்புற்றிருக் கிறார்கள்.

"உததியிடை கடவுமர கதவருண குலதுரக

உபலளித கனகரத சதகோடி சூரியர்கள் உதயமென அதிகவித கலபகக மயிலின்மிசை

யுகமுடிவின் இருளகல ஒருசோதி வீசுவதும்'

என்பது சீர்பாத வகுப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/55&oldid=643610" இலிருந்து மீள்விக்கப்பட்டது