பக்கம்:வழிகாட்டி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 வழிகாட்டி

பெருமையை உணர்ந்த பெரியோர்கள் உலகத்துக்குக் கண் என்றும், கண் கண்ட தெய்வமென்றும் அவனைப் பாராட்டுகிறார்கள். சாதி சமய பேதமின்றிப் பலரும் புகழும் ஞாயிறு தன்னுடைய செங்கதிரைத் தோன்றிக் கொண்டு கண்கொண்டு பார்க்கும் அளவிலே நீலக் கடற்பரப்பில் உதயமாகின்றான்.

கீழ்கடற் பரப்பிலே நெடுந்துாரம் பரவிய கிரணங் களை வீசிக் கொண்டு எழும் சூரியனது உதயம் கண் கொள்ளாக் காட்சி. மேலே நீலநெடு வானம்; கீழே நீலக்கடற் பரப்பு; இவற்றினிடையே அவனது செம்மை எடுப்பாக விளங்குகின்றது.

நக்கீரர் அந்தணர். பாண்டி நாட்டில் வாழ்ந்தவர். கீழ் கடற்கரையிலே காலையில் சந்தியாவந்தனம் செய்தார் போலும் அவர் அருக்கியம் கொடுக்கும்போது உதய சூரியனது பேரழகைக் கண்ணால் பருகினார். அவர் உள்ளத்தே அந்தக் காட்சி பதிந்து விட்டது. நீலக்கடற் பரப்பில் உலகம் உவப்பவும் பலரும் புகழவும் செங்கதிர் வீசி எழுந்த சூரியனது நினைவோடு அவர் உள்ளம் அமைய வில்லை. புற இருளைப் போக்கும் இந்தக் கதிரவனது காட்சி அக இருளைப் போக்கும் ஒரு பரஞ் சுடரின் காட்சியை நினைப்பூட்டியது. முருகன் எழில் உதயத்தையும் சூரியோதயத்தையும் இணைத்துப் பாடினார். திருமுருகாற்றுப்படையின் உதயம் அதுதான். முதல் மூன்றடிகள் இந்தக் காட்சியை நினைப்பூட்டுகின்றன.

உலகம் உவப்ப வலன்ஏர்வு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு ஒவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/54&oldid=643609" இலிருந்து மீள்விக்கப்பட்டது