பக்கம்:வழிகாட்டி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம்

உதயம்

உதயம் ஆகிவிட்டது. கதிரவன் கீழ்கடற் பரப் பிலே தன் சோதிக் கிரணங்களைப் பரப்பி எழுகின்றான். அதுகாறும் உறங்கிக் கிடந்த உலகம் விழித்தெழுகின்றது. பறவைகள் தம் சிறைகளை உலுக்கித் தட்டிப் பறக்கத் தொடங்குகின்றன. விலங்கினங்கள் இயங்குகின்றன. மக்கட் கூட்டம் முழுவதும் தங்கள் தங்கள் தொழிலைப் பார்க்க ஆரம்பிக்கின்றது. குழந்தையும் கிழவனும், தொழிலாளியும் கலைஞனும், செல்வனும் புலவனும், ஆணும் பெண்ணும் தங்கள் தங்கள் இயக்கம் ஒழிந்து துயிலில் ஆழ்ந்து நின்றபொழுது அவர்களுக்கு ஜீவனே இல்லை. உயிர் இருப்பது மூச்சினால் தெரிந்ததே ஒழிய அதன் விளக்கம் இல்லை. எல்லாம் உயிரோடு ஒரு மரணநிலை இருந்தால் எப்படியிருக்குமோ அப்படி இருந்தார்கள். சூரியன் தோன்றினான். அவர்கள் உடம்பில் ஜீவசக்தி மலர்ந்தது. அடங்கியிருந்த சைதன்யம் கிரணங் களைப் பரப்பத் தொடங்கியது.

சூரியன் உதயமானான் என்றால் புல் பூண்டு, பசு பறவை, மனிதர் யாவரும் ஜீவசக்தியுடன் எழுகிறார்கள்; மகிழ்ச்சியை அடைகிறார்கள். சூரியன் ஒரு நாட் போலவே உலகமெல்லாம் உவக்கும்படியாக உதயம் செய்து மேருவை வலமாக வருகிறான். அவனுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/53&oldid=643608" இலிருந்து மீள்விக்கப்பட்டது