பக்கம்:வழிகாட்டி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 வழிகாட்டி

திருமுருகாற்றுப்படைக்குப் பின்னால் பத்து வெண்பாக் கள் இருக்கின்றன. அவற்றில் இந்தக் கதைக்கு ஆதார மான சில குறிப்புகள் உள்ளன.

குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும் அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும் - இன்றென்னைக் கைவிடா நின்றதுவும் கற்பொதும்பிற் காத்ததுவும் மெய்விடா வீரன்கை வேல்.

அந்த வெண்பாக்கள் நக்கீரர் வாக்காகக் கொள்வதற் குரியன அல்ல. பாராயணம் செய்யும் அன்பர்களுள் புலவர் ஒருவர் இயற்றிச் சேர்த்தவை என்றுதான் கொள்ள வேண்டும். சொல்லமைப்பு முதலிய குறிப்புக்கள் இதற்கு ஆதாரம். -

திருமுருகாற்றுப்படை பிறந்த கதையை நம்பினாலும் நம் பாவிட்டாலும், திரு முரு காற்றுப் படை யின் பெருமையை உணரத் தடையில்லை. சங்க காலத்து நூலாகிய அதில் செந்தமிழ் இன்பமும் முருகக் கடவு ளுடைய பெருமையும் கவிச்சுவையும் செறிந்திருக் கின்றன. அவற்றில் ஈடுபட்டால் திருமுருகாற்றுப்படை உண்மையான இன்பத்துக்கு வழிகாட்டி என்பதை 2 &ossGUITLs).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/52&oldid=643607" இலிருந்து மீள்விக்கப்பட்டது