பக்கம்:வழிகாட்டி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறந்த கதை 49

அவ்வாறே நக்கீரர் தம் யாத்திரையைத் தொடர்ந்து நடத்திக் காளத்தி அடைந்து அங்கே கைலாச தரிசனம் செய்தார். தொழுநோய் நீங்கப்பெற்று, 'கைலைபாதி காளத்திபாதி அந்தாதி' என்ற பிரபந்தத்தைப் பாடி வழி பட்டார். ஒரு பாட்டுக் கைலையைப் பற்றியும் அடுத்த பாட்டுக் காளத்தியைப் பற்றியும் கூறும் நூறு வெண் பாக்களால் ஆனது அவ்வந்தாதி. அந்த தலத்தில் உள்ள அம்பிகையின் திருநாமம் ஞானப் பூங்கோதை என்பது. நக்கீரருக்கு எந்த உண்மையை மறுத்ததனால் நோய் உண்டாயிற்றோ, அந்த உண்மையை அறிவுறுத்தும் திரு நாமம் படைத்த அம்பிகை வாழும் தலம் அது.

மீண்டும் நல்ல மேனி படைத்து நக்கீரர் மதுரை வந்து சேர்ந்தார்.

நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை தெய்விக மான நூல் என்று கருதி முருகனடியார்கள் அதைப் பாரா யணம் செய்து வருகிறார்கள். அதனால் தம் விருப்பம் நிறைவேறப் பெறுவர்.

திருமுருகாற்றுப்படை பிறந்த வரலாறாகிய இந்தக் கதை திரு விளையாடற் புராணத்திலும், திருப்பரங் குன்றப் புராணத்திலும், சீகாளத்திப் புராணத்திலும் வரு கிறது. கதைப் போக்கில் சிலசில வேறுபாடு இருந்தாலும் மேலே சொன்ன வரலாற்றையே அவை குறிக்கின்றன.

சங்க காலத்தில் வாழ்ந்த நக்கீரர் வாக்காகிய திரு முருகாற்றுப்படைக்குப் பெருமை வரும் பொருட்டுப் புராணக் கதைகளை உண்டாக்கினார்கள் என்று ஆராய்ச் சிக்காரர்கள் சொல்லுவதுண்டு. சங்க நூல்களில் நக்கீரர் பாடல்கள் பல உண்டு. அவற்றிலோ, திருமுருகாற்றுப் படையிலோ இந்த வரலாற்றுக்கு ஆதாரம் இல்லை.

வ.க.-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/51&oldid=643606" இலிருந்து மீள்விக்கப்பட்டது