பக்கம்:வழிகாட்டி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வழிகாட்டி

விசாரித்தார். "ஆயிரம் பேர்களைக் கூட்டி உண்ணும் வழக்கம் உடையது இந்தப் பூதம். இது வரையில் ஆயிரம் என்ற கணக்கு நிறைவேறாமல் நாங்கள் செளக்கியமாக இருந்தோம். நீ வந்து அந்தக் குறையைப் போக்கினாய். இனி நமக்கு இங்கே வேலை இல்லை. பூதத்தின் வயிற்றுக்குள் போகவேண்டியது தான்' என்று கூறி நைந்தார்கள்.

நக்கீரர் உண்மை நிலையை உணர்ந்தார். திருப்பரங் குன்றத்தில் முருகக் கடவுள் கோயில் கொண்டிருக்கிறார். வீரமும் கருணையும் உடைய அப்பொருமான் வாழும் மலையில் இப்படி அக்கிரமம் நடைபெறலாமா? - புலவர் பெருமான் முருகவேளைத் தியானித்தார். மனம் கசிந்து திருமுருகாற்றுப்படையைப் பாடினார். தமிழுக்கு இரங்கும் கடவுளாகிய முருகவேள் தோன்றிக் கற்கிமுகி என்னும் பூதத்தைக் கொன்று யாவரையும் விடுவித்தான்.

"ஆறுமுகப் பெருமானே, நின் தந்தைக்கும் தாய்க் கும் அபசாரம் செய்து இந்த நோய்க்கு ஆளானேன். கைலைக் காட்சி பெற்றால் நோய் தீரும் என்று அருளினார் சிவபிரான். மதுரையை அடுத்துள்ள இதைத் தாண்டுவதற்குள்ளேயே இந்த இடையூறு தலைப்பட்டது. இனி நான் எவ்வாறு மக்களால் அணுகுவதற்கு அரி தென்று சொல்லும் கைலையை தரிசிப்பது என்று கூறி நக்கீரர் முருகக் கடவுள் தாளில் வீழ்ந்து அலறினார். அப்பிரான் திருவுள்ளம் இரங்கி, “நீ கவலைப்பட வேண்டாம்; தென்கைலையென்று புகழ்பெற்ற காளத் திக்குச் சென்றால் கைலாச தரிசனம் பெறலாம். உன் நோயும் நீங்கும்" என்று அருள் செய்து மறைந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/50&oldid=643605" இலிருந்து மீள்விக்கப்பட்டது