பக்கம்:வழிகாட்டி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறந்த கதை 47

மிகவும் உருகிப் புலம்பி வேறு வழியில்லாமல் விடை பெற்றுக் கொண்டு தம் பிரயாணத்தைத் தொடங்கினார்.

மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தை அடைந்த போது சிவபூஜை செய்யும் நேரம் ஆயிற்று. உடனே அங்குள்ள தடாகத்தில் நீராடி அதன் கரையி லுள்ள ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து பூஜை செய்யத் தொடங்கினார். பூஜை செய்யும்பொழுது ஒர் அதிசயம் நிகழ்ந்தது. ஆலமரத்திலிருந்து ஒரு பழுத்த இலை உதிர்ந்து கரையில் பாதியும் நீரில் பாதியுமாக விழுந்தது. உடனே கரையில் பட்ட பகுதி பறவையாகவும், நீரில் பட்டது மீனாகவும் மாறி ஒன்றையொன்று இழுத்துக் கொண்டு நின்றன. சிவபூஜையில் ஈடுபட்டிருந்த நக்கீரர் இந்தக் காட்சியிலே மனத்தைப் பறிகொடுத்துச் சிலநேரம் சிவபூஜையை மறந்திருந்தார். அந்தச் சமயம் பார்த்துக் கற்கிமுகி என்ற பூதம் ஒன்று அவரைத் துக்கிப் போய் அந்த மலையில் உள்ள குகையில் அடைத்து விட்டது. அகங்காரத்தினால் பெற்ற தண்டனை போகக் கைலாசம் செல்ல வந்த அவருக்கு மனச் சலனம் என்ற குற்றத் துக்கு இங்கே சிறைத்தண்டனை கிடைத்தது.

அந்த முழையில் முன்பே 999-பேர் அடைபட்டுக் கிடந்தனர். சிவபூஜையினின்றும் வழுவச் செய்து அதுவே சாக்காகக் கொண்டு கற்கிமுகியினால் சிறைப் படுத்தப்பட்டவர்கள் அவர்கள். அக்கூட்டத்தினர் நக் கீரரைக் கண்டவுடன் ஆரவாரம் செய்து அவரை வைதார்கள். 'சிறைப்பட்டாலும் இதுவரையில் நாங்கள் உடல் கொழுக்க உண்டு வந்தோம். நீ வந்து எங்கள் வாழ்வுக்கே உலை வைத்தாயே!” என்று குறை கூறு வதைக் கேட்ட நக்கீரர், 'விஷயம் என்ன?’ என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/49&oldid=643604" இலிருந்து மீள்விக்கப்பட்டது