பக்கம்:வழிகாட்டி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வழிகாட்டி

விட்டது. நல்லிசைச் சான்றோர் நிலையிலிருந்து அழுக் காறும் அகங்காரமும் உடைய கீழ் மகனாகிவிட்டார் அவர். ஆகவே, அந்த நிலையில் அவரை நக்கீரராக எண்ணி வாதிப்பதைவிட முரடனாக எண்ணித் தண்டிப் பதே சரியென்ற முடிவுக்கு வந்தார் சோமசுந்தரக் கடவுள்.

நெற்றிக் கண்ணிலிருந்து கொடுந்தீ புறப்பட்டு நக் கீரர் உடலை வெதுப்பியது. தெய்வமடந்தையரைக் குறைகூறும் அளவு தடித்த தடிப்பை உருக்க அது உதவி யது. நக்கீரர் உள்ளத்தையும் அது சுட்டது. உடம்பெல் லாம் புண்ணாகியது. வெப்பம் தாங்க மாட்டாமல், 'ஐயோ!' என்று அலறிக் கொண்டு பொற்றாமரைக் குளத்தில் போய் வீழ்ந்தார். ஒரளவு உடல் குளிர்ந்த போது உணர்வு உண்டாயிற்று. தாம் செய்த பிழையை உணர்ந்தார். "பெருமானே! ஒலம் ஒலம் கருணாநிதியே: ஒலம் ஒலம் நின் பெருமையை மறந்த என்னைக் காப் பாற்ற வேண்டும். அருளுருவாகிய பராசக்தியை அவ மதித்த பெரும் பாவத்துக்கு ஆளாகிய என்னைக் கடைக் கணித்து ஆட்கொள்ள வேண்டும்" என்று முறையிட்டார்.

சிவபெருமான் திருவுள்ளம் இரங்கி அவரைப் பொற்றாமரையிலிருந்து எடுத்துக் கரையில் விட்டார். அவர் உடம்பு முழுதும் தொழுநோய் வந்துவிட்டது. “எம்பெருமானே இதற்குத் தீர்வு இல்லையா?” என்று சிவபிரானது அடிபணிந்து வேண்டியபொழுது, "கைலாச தரிசனம் செய்தாயானால் இந்த நோய் நீங்கும்' என்று அருளிக் கடவுள் மறைந்தார்.

நக்கீரர் கைலையை நோக்கிப் புறப்பட்டார். மதுரையையும் தமிழ்ச் சங்கத்தையும் பாண்டியனையும் சோமசுந்தரக் கடவுளையும் பிரிய மனம் இல்லாதவராகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/48&oldid=643603" இலிருந்து மீள்விக்கப்பட்டது