பக்கம்:வழிகாட்டி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறந்த கதை 45

"அது தவறு. ' நக்கீரர் பெரிய அபராதியாகிவிட்டார். உண்மையை மறுப்பதோடு தேவ மகளிரையும் மூன்று சக்திகளையும் அவமதிக்கும் பெரிய பாவத்துக்கு ஆளாகிவிட்டார். அவரைக் காரணங்காட்டி வெல்வதென்பது இயலாத காரியம். அகங்கார முனைப்பினால் அறிவு தட்டழிந்து நிற்கும் அவருக்கு ஒரளவு அதிகாரத்தைக் காட்டி வழிக்குக் கொண்டுவர வேண்டுமென்று இறைவர் எண்ணினார். சிறிதே தம் நெற்றிக் கண்ணைக் காட்டினார். அகங்காரம் தலையெடுத்து வெறி மூண்டால் எதிர் நின்ற பொருளை உணரும் தெளிவு இராது. எதிர்வந்த பொருள் எவ்வளவு வலியதானாலும் அதற்கேற்ப அது சீறி விழுந்து கொப்பளித்துப் பெருகும். நக்கீரர் அந்த நிலையில் இருந்தார். சும்மா சீறிய பாம்பு படமெடுத்துச் சிறுவதைப் போலச் சினம் பொங்க, 'நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றந்தான்' என்று முழங்கினார். தமிழ் மரபு பிறழாமல், இயற்கைத் தத்துவத்தோடு இயைந்த அகத்துறைப்பாட்டைப் பிழையென்று சொல்ல எந்தச் சாமான்யமான புலவனும் துணியமாட் டான். பாண்டியன் மகிழ்ந்ததுபோல மகிழும் இயல்பு தான் துய உள்ளம் படைத்த புலவனுக்கு இருக்கும். நக் கீரரோ அடிபட்ட சிங்கம். தன் தோல்வியினால் எழுந்த சீற்றம் பொங்கக் குமுறுவதைப்போல நின்றார். தம்மா லும் பிறராலும் பாட முடியாத ஒன்றை வேறொருவர் பாடுவது, அதைப் பாண்டியனும் பாராட்டிப் பரிசளிப் பது; இதை அவர் பார்த்துக் கொண்டிருப்பதா? இந்த அகங்காரம் கண்ணை மறைக்கக் குற்றம் இல்லாத இடத்தில் குறைகாணும் இயல்பு நக்கீரருக்கு வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/47&oldid=643602" இலிருந்து மீள்விக்கப்பட்டது