பக்கம்:வழிகாட்டி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வழிகாட்டி

உண்டென்பது பிழை” என்று நக்கீரர் வாதிக்கத் தொடங்கினார்.

'உத்தம மகளிர் திருமேனியிலும் கூந்தலிலும் மணம் உண்டு என்று நூல்கள் கூறுவதை நீர் உணர்ந்த தில்லையோ?"

'நூல்கள் கூறினாலும் நான் நம்ப மாட்டேன். இயற்கையில் அது பொய்."

'பாண்டியன் மனைவியைப் போன்ற அரசகுல மடந்தையர் கூந்தல் இயற்கையாகவே நறுமணம் உடைய தென்பதை நீவிர் அறியீரோ?"

"அதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன்."

‘'தேவமடந்தையர் கூந்தலில் நறுமணம் இல்லையா?"

'இல்லை' 'இந்திராணியின் கூந்தலிலோ?" 'அதுவும் அப்படித்தான்." 'கலைமகள் கூந்தல்?” 'அதுவுந்தான்.'

'திருமகளின் எழிற் கூந்தல்?” 'அதுவும் மணமற்றதே."

'உமாதேவியாரின் கூந்தலிலும் இயற்கை மணம் இல்லையா :

'அங்கும் இல்லை."

"ಸ್ತ್ರ(67) பூங்கோதை யென்ற திருநாமம் வழங்கு வதை நீர் அறிந்ததில்லையாடி:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/46&oldid=643601" இலிருந்து மீள்விக்கப்பட்டது