பக்கம்:வழிகாட்டி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறந்த கதை 43

கொண்டுபோய்க் காட்டினான். புலவர் பாட்டைப் பார்த் தார். 'இந்தப் பாட்டைப் பாடிய புலவன் இவன் அல்ல' என்று ஒரு கணத்தில் தெரிந்து கொண்டார். 'இந்தப் பாட்டில் பிழை இருக்கிறது. அது இன்ன தென்று சொன்னால் உனக்கு விளங்காது. இதனைப் பாடித் தந்த புலவனைக் கூட்டிக் கொண்டு வா. பேசிக் கொள்கிறேன்' என்று கடுமையான குரலில் அவர் கூறினார். தருமிக்கு நடுக்கம் எடுத்துக் கொண்டது. 'இதென்ன விபரீதமாயிருக்கிறதே அரசன் ஆணையை மிஞ்சிய அதிகாரமும், இறைவன் அருளை மறுக்கும் அகங்காரமும் படைத்த இந்த மனிதர் யார்?' என்று அவன் நினைத்திருக்கலாம். உடனே ஆலயத்துக்கு ஓடினான். 'பெருமானே, எனக்குக் கல்யாணம் இல்லா விட்டாலும் போகட்டும், உன்னுடைய பாட்டைப் பிழையென்று சொல்லி ஒருவன் அகங்கரிக்கின்றானே; இந்த அப வாதத்துக்கு நான் அல்லவா காரணமாகி விட்டேன். முதலில் இதைப் போக்கியருள வேண்டும்' என்று கீழே விழுந்து அழுது புலம்பினான். 'நாம் போய் வாதம் செய்வோம்' என்ற திருவாக்கைக் கேட்டு ஆறுதல் அடைந்தான்.

சோமசுந்தரக் கடவுள் ஒரு புலவரைப் போல வேடம் பூண்டு கற்றுச் சொல்லிகளுடன் புறப்பட்டுச் சங்கத்தை நோக்கிச் சென்றார். "நம்முடைய பாட்டில் குற்றம் கூறினவர் யார்?' என்று கேட்டார். 'நான்தான்' என்று மிடுக்காகக் கூறினார் நக்கீரர். 'சொல்லிலே குற்றமா? பொருளிலே குற்றமா?' என்று கேட்டார் புதுப்புலவர். 'பொருளில்தான், மலராலும் நறுநெய் யாலும் மணம் பெறும் கூந்தலுக்கு இயற்கை மணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/45&oldid=643600" இலிருந்து மீள்விக்கப்பட்டது