பக்கம்:வழிகாட்டி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வழிகாட்டி

அப்பிரானிடத்திலேயே முறையிட்டுக் கொண்டான். 'உன்னுடைய வழிபாடு பரம்பரையாக வந்து கொண் டிருக்கிறது. எனக்குச் சந்ததி உண்டானால் தான் இந்தத் தொண்டுத் தொடர் அறாது நிற்கும். நான் மணம் செய்து கொள்ளப் பொருள் இல்லையே!” என்று விண்ணப்பித்துக் கொண்டான்.

அன்பருக்கு இரங்கும் ஆலவாய் பெருமான் அவனுக்கு அருள் செய்யும் காலத்தை எதிர்நோக்கியிருந் தார். பாண்டியன் பொற்கிழியைத் தொங்கவிட்டு, தன் கருத்தைப் பாடுபவருக்கென்று வைத்திருப்பதை உணர்ந்து; 'கொங்குதேர் வாழ்க்கை என்று தொடங்கும் செய்யுள் ஒன்றைப் பாடித் தருமியின் கையில் அளித்து, "இதைக் கொண்டு சென்று பாண்டியனிடம் காட்டிப் பரிசு பெற்று உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள் வாயாக’ என அருளினார். அந்தப் பிரமசாரி அப்படியே அதனைப் பெற்றுச் சென்று பாண்டியனிடம் காட்டினான். தலைசிறந்த புலவர்களாலும் உணர்தற்கரிய பொருளை உணர்ந்து பாடிய பாட்டாக அது இருந்தது. மடந்தையர் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டென்பதை அகத் துறைப் பாட்டில் வைத்துத் தெரிவித்திருந்தது கண்ட பாண்டியன் உள்ளம் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தது. "பொற்கிழியை எடுத்துக் கொள்க’ என்று கூறினான். தருமியும் வெகு வேகமாகக் கிழியை அறுத்துக் கொள்ள ஓடினான்.

'நில் அப்பா எங்கே, உன் பாட்டை இங்கே கொண்டு வா பார்க்கலாம்" என்ற குரலைக் கேட்டு அவன் நின்றான். சங்கப் புலவர் கூட்டத்தில் ஒருவராக அமர்ந்திருந்த நக்கீரரே அதைக் கூறினார். தருமி பாட்டைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/44&oldid=643599" இலிருந்து மீள்விக்கப்பட்டது