பக்கம்:வழிகாட்டி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறந்த கதை 41

புலவர்கள் பாடத் தொடங்கினார்கள். இறைவன் செய்த மாயையோ யாதோ, அவர்களால் பாண்டியனது உள்ளக் குறிப்பை உணர இயலவில்லை. பாட்டுப் பாடிப் பாண்டியனிடம் காட்டினர். அவன் எல்லாவற்றையும் நோக்கினான். ஒன்றாலும் அவனுக்கு திருப்தி உண்டாக வில்லை. தமிழுலகில் தலைசிறந்த அந்தப் புலவர்களா லேயே தன் கருத்துக்கு இசையப் பாட முடியவில்லையே என்ற துயரம் பாண்டியனை ஆட்கொண்டது. அப்படி யானால் தெய்வப் புலமையே உலகத்தில் அஸ்தமித்துப் போய்விட்டதா? அதையும் பார்த்துவிடலாம் என்று எண்ணி, ஆயிரம் பொன்னை எடுத்து ஒரு கிழியில் இட்டுத் தமிழ்ச் சங்கத்தின் முன்னே அதைத் தொங்க விட்டு, 'என் கருத்தைத் தெரிவிக்கும் கவிதை பாடு வாருக்கு இது உரியது' என்ற செய்தியை எங்கும் பரப் பினான். சங்கப் புலவர்களின் அகங்காரத்தை அடக்கும் பொருளாக அக்கிழி சங்க மண்டபத்தின்முன் தொங்கிக் கொண்டிருந்தது.

மதுரையில் சுந்தரேசக் கடவுளுக்குப் பூஜை செய்து வந்த தருமி என்ற ஆதிசைவன் அப்பெருமானிடத்திலே அளவற்ற பக்தியுடையவனாக இருந்தான். அவன் பிரம சாரி. மணம் செய்து கொண்டு புத்திரனை பெற்றால் வழிவழி வந்த பூஜைத் திருத்தொண்டு இடையறாமல் நடைபெறும் என்ற வேட்கை அவனுக்கு எழுந்தது. ஒரு பெண்ணைப் பார்த்து மணம் செய்துகொள்ளப் போதிய பொருள் அவனிடம் இல்லை. பிறரிடம் சென்று யாசகம் செய்யும் மனப்பாங்கும் அவனுக்கு இல்லை. என் செய்வது? தனக்கு உரிய பெருநிதியும் துணையும் சுந்த ரேசப் பெருமானே என்ற உறுதியுடையவனாதலினால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/43&oldid=643598" இலிருந்து மீள்விக்கப்பட்டது