பக்கம்:வழிகாட்டி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் 61

பதினாறு வடம், பதினெட்டு வடம், முப்பத்திரண்டு வடம் என்று வடக்கணக்குள்ள மேகலைகள் உண்டு. அவைகளுக்குள் குறைந்த ஏழு வடங்களையுடைய மேகலையை அவர்கள் அணிந்திருக்கிறார்கள். அந்த மேகலையின் ஒவ்வொரு வடத்திலும் பல அழகிய மணிகள் கோக்கப் பட்டிருக்கின்றன. ஆடையில்லா திருந்தாலும் இந்த மேகலையே அவர்கள் இரகசியத் தானத்தை மறைக்கும்படியாக அமைந்திருக்கிறது.

அந்த அலங்கார சோபையோடு அவர்களைப் பார்த் தால், 'ஏது? இப்படி ஒருவர் ஒருவரைப் புனைவதென் பது சாத்தியமா? இது என்னவோ இப்படியே எல்லா அமைப்போடும் பொருந்தி வார்த்துவிட்ட லாவண்யமாக அல்லவோ இருக்கிறது?’ என்று சொல்லும்படியாக அவர்களுடைய வனப்பு விளங்குகிறது. அவர்கள் அணிந்து கொண்டிருக்கும் பூண்களோ சாம்பூந்தம் என்ற சிறந்த பொன்னால் ஆகியவை. அவர்களுடைய மேனி யில் மாசு மறுவே இல்லை. அதன் ஒளி நெடுந்துாரம் வீசுகின்றது.

மால்வரை நிவந்த சேண்உயர் வெற்பில் கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடி கணைக்கால், வாங்கிய நுசுப்பின், பணைத்தோள், கோபத்து அன்ன தோயாப் பூந்துகில் பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல், கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பின், நாவலொடு பெயரிய பொலம்புனை அவிர்இழை, சேண்இகந்து விளங்கும் செயிர்தீர் மேனி. (பெரிய மூங்கில்கள் வளர்ந்து வானளவும் உயர்ந்த மலையில் - (சூரரமகளிர் ஆடுகிறார்கள் என்று சொல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/63&oldid=643618" இலிருந்து மீள்விக்கப்பட்டது