பக்கம்:வழிகாட்டி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வழிகாட்டி

வருகிறார். அவர்கள் பின்வரும் கோலம் படைத்தவர் கள்.) கிண்கிணி சூழ்ந்த ஒளி படைத்த, சிவந்த சிறிய அடியையும், திரண்ட காலினையும், வளைந்த இடை யினையும், பெரிய தோள்களையும், இந்திர கோபத்தைப் போன்ற, சாயந் தோய்க்காமல் இயற்கையாகவே சிவந்த பூவேலை செய்த துகிலையும், பல மணிகள் கோத்த சில வடங்களையுடைய மேகலையை அணிந்த இரக சியத் தானத்தையும், ஒருவர் அலங்கரிக்காமலே அழகு பெற்ற லாவண்யத்தையும், நாவல் மரத்தினாற் பெயர் பெற்ற சாம்பூந்தம் என்னும் பொன்னால் ஆகிய விளங்கு கின்ற ஆபரணங்களையும், நெடுந்துரம் கடந்து பிரகா சிக்கும் குற்றமற்ற உடல் வண்ணத்தையும் - உடைய சூரரமகளிர் என்று சொல்ல வருகிறார்.)

அந்த அர மகளிரின் தலைக் கோலமே தனிச் சிறப்பை உடையது. அவர்கள் அழகிய சோலையைத் தேடி வந்து ஆடுகிறார்கள். அதன் உண்மை இப்போது தான் தெரிகிறது. எழில் நிறைந்த வண்ணப்பூக்களால் தங்களை அலங்கரித்துக் கொள்ள விழையும் அவ் வணங்குகளுக்கு வேண்டியவாறே வேண்டிய மலரைத் தருவது வளம் நிரம்பிய மலைச்சாரற் சோலைதானே?

அவர்கள் தலையில்தான் எத்தனை நிறம்பெற்ற மலர்கள் அவற்றை அவர்கள் வைத்துப் புனைந்து கொண்ட அழகுதான் என்னே

அவர்களைச் சேர்ந்த தோழிமாரெல்லாம் அவர் களைப் பாராட்டும்போது முதலில் அவர்களுடைய கூந் தலையே சிறப்பாக எடுத்துச் சொல்வார்கள். நீளமும் குறுகலும் இல்லாமல் நுனியெல்லாம் ஒன்று சேர்ந்து கடையொத்த கூந்தல் அது; நெய்ப்பை உடையதாகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/64&oldid=643620" இலிருந்து மீள்விக்கப்பட்டது