பக்கம்:வழிகாட்டி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் 63

மினுமினுக்கும் ஒதி; அவர் துணைவியர் நன்றென்று ஆய்ந்து பாராட்டுகின்ற எழில் வாய்ந்தது.

அந்தக் கூந்தலுக்கு மலராலும் அணியாலும் மேலும் அழகு செய்திருக்கிறார்கள். செக்கச் செவே லென்றிருக்கும் வெட்சிப் பூவின் சிறிய இதழ்களை நடுவிலே வைத்து, அவற்றைச் சுற்றிக் கருநீல நிறமுள்ள குவளையிதழைக் கிள்ளி வைத்திருக்கிறார்கள். சீதேவி யென்ற ஆபரணத்தையும் வலம் புரி யென்னும் அணியையும் தலையின் இரு பக்கங்களிலும் அமைத் திருக்கிறார்கள்.

அவர்களுடைய முன்னுச்சி மயிரில், திலகம் இட்ட நெற்றியிலே வந்து படியும்படியாக மகரவாய் என்ற அணிகலம் அமைந்திருக்கிறது. அதன் பின்னே கொண்டையிட்டிருக்கிறார்கள். அந்தக் கொண்டையை எப்படி முடித்தால் அழகாக இருக்குமோ அப்படி முடித் திருக்கிறார்கள்: அதற்கு மேலே பெரிய தண்ணிய சண்பகப் பூவைச் செருகிக் கரிய புறவிதழையும் பஞ்சு போன்ற துய்யினையும் உடைய மருதம் பூங்கொத்து களை இட்டுப் புனைந்திருக்கிறார்கள். இவ்வாறு கொண்டையினிடையே சண்பகமும் மருதமும் வெவ் வேறு நிறங்காட்டி எழில் செய்ய, அக்கொண்டையைச் சுற்றிச் சிவப்பு நிறமுள்ள அரும்புகளைக் கட்டிய மாலையை வளையச் சுற்றி அழகுக்கு எல்லை கோலுவது போலச் செய்திருக்கின்றனர். நீருக்கு மேலே வந்து மலர் வதற்கு முன் நீரின் கீழே இருக்கும்போது நீர்ப்பூவின் அரும்பு மிகச் சிவப்பாக இருக்கும். இந்த இயல்பு தெரிந்து மிகவும் அரும்பாக இருப்பவற்றுக்கு மேலே நீரின்கீழ்த் தோன்றும் செவ்வரும் பைப் பறித்துப் பிணைத்த மாலை அது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/65&oldid=643623" இலிருந்து மீள்விக்கப்பட்டது