பக்கம்:வழிகாட்டி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 வழிகாட்டி

இவ்வாறு பல வண்ணப் பூக்களும் சேர்ந்து, கன்னங்கரிய கூந்தற் பரப்பிலே பின்னும் தம் நிறம் மேலோங்கி ஒளிர அழகிய காட்சியை உண்டாக்கு கின்றன.

துணையோர் ஆய்ந்த இணையீர் ஒதிச் செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித் தெய்வ உத்தியொடு வலம்புரி வயின்வைத்துத் திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல் மகரப் பகுவாய் தால மண்ணுறுத்துத் துவர முடித்த துகளறு முச்சிப் பெருந்தண் சண்பகம் செரீஇக் கருந்தகட்டு உளைப்பூ மருதின் ஒள்இணர் அட்டிக் கிளைக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு இணைப்புறு பிணையல் வளைஇ.

(தமக்குத் துணையாக உள்ள தோழிமார் இது அழகிது என்று ஆராய்ந்ததும், ஒத்து வளர்ந்து நெய்ப்போடு கூடியதுமாகிய கூந்தலில் சிவந்த காம்பையுடைய வெட்சிப் பூவின் சிறிய இதழ்களை இடையில் வைத்து, பசிய தண்டையுடைய குவளை மலரின் தூய இதழைக் கிள்ளியிட்டு , தெய்வ உத்தியாகிய சீதேவியையும் வலம்புரியையும் பக்கங்களில் அமைத்து, திலகத்தால் அலங்கரித்த இனிமை பரவிய அழகிய நெற்றியில் மகர வாய் படியும்படியாகச் சீவிச் சிக்கறுத்து நன்கு முடித்த குற்றமற்ற கொண்டையில், பெரிய தண்ணிய சண்பகப் பூவைச் செருகி, கரிய மேனி தழையும் பஞ்சுபோன்ற தூய்மையும் உடைய மருதக் கொத்துக்களை அமைத்து, சூழ உள்ள அரும்புகளினிடையே அழகு பெற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/66&oldid=643625" இலிருந்து மீள்விக்கப்பட்டது