பக்கம்:வழிகாட்டி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் 65

எழுந்த நீரின் கீழே உள்ள சிவந்த அரும்பைக் கட்டிய மாலையை வளையச் சுற்றி - ஆடும் மகளிர் என்று சொல்ல வருகிறார்.)

அவர்கள் காதில் என்ன அணிந்திருக்கின்றனர் தெரியுமா? இயற்கை தந்த எழில் நிறத் தளிர்கள். பழங் காலத்தில் தளிரைக் காதில் செருகுவது வழக்கமாக இருந்தது. தளிருக்குக் குழை என்றும் பெயர் உண்டு. தளிரை அணிவது போய் அவ்விடத்தில் பொன்னணி வந்த காலத்தும் பழைய பெயராகிய குழையென்பது மாத்திரம் நின்று விட்டது. இந்தச் சூரரமகளிரும் தளிரையே காதில் செருகியிருக்கின்றனர். சிவந்த அசோகந் தளிர் அவர் காதில் ஒளிவிடுகிறது. வளவிய காதுகளில் இருபாலும் ஒத்த அளவிலே அந்தத் தளிரைச் செருகியிருக்கிறார்கள்.

அந்தத் தளிர், அவர்கள் ஆடும்போது நுண்ணிய வேலைப்பாடு அமைந்த அணிகலன்களை அணிந்த மார்பிலே வந்து அசைகின்றன.


துணைத்தக வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர் நுண்பூண் ஆகம் திளைப்ப. (இருபாலும் ஒத்துத் தோன்றும்படி வளப்பமுள்ள காதுகளில் நிறையப் பெய்த அசோகந் தளிரானது, நுண்ணிய வேலைப்பாடுகளையுடைய பூண்களை அணிந்த மார்பிலே அசைய. பிண்டி - அசோகு, ஆகம் - மார்பு.)

அவர்கள் மார்பில் கோங்கரும்பைப் போல அழகு பெற்று நிமிர்ந்து நிற்கும் கொங்கைகளுக்கு மேலே

வ.க.-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/67&oldid=643628" இலிருந்து மீள்விக்கப்பட்டது