பக்கம்:வழிகாட்டி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வழிகாட்டி

தூரத்திலே வரும் போதே அந்தக் கொடி தெரிகிறது. அதன் ஆட்டம் எப்படி இருக்கிறது தெரியுமா? உங் களுக்கு வீரம் உண்டானால் இங்கே வந்து போர் செய் யுங்கள்; எங்கள் பாண்டியன் வீரத்தைக் காணலாம்: என்று செருச் செய்வாரை அறைகூவுவது போல இருக் கிறது. மேலே நாட்டிய அந்தக் கொடிக்கு அருகிலே வரிந்து கட்டிய பந்தும் பொம்மைகளும் தொங்குகின்றன, பந்தும் பாவையும் மகளிர் விளையாடுவதற்கு உரிய பொருள்கள். பகைவர்களெல்லாம் அந்த வாசலுக் குள்ளே புக எண்ணினால், தங்கள் வீரமெல்லாம் போகப் பந்தையும் பாவையையும் ஆடும் மகளிரைப் போலத் தான் புக வேண்டுமென்ற குறிப்பை அவை காட்டு கின்றன. ரோசமுடைய பகைவர்கள் முதலில் அவ் விரண்டையும் அறுத்து எறிந்து விட்டுப் போர் செய்யப் புகுவார்கள். இங்கே மதுரையில் நெடுங்காலமாகக் கொடி வானளாவி நின்று ஆடுகின்றது. பந்தும் பாவையும் நெடுங்காலமாக அறுப்பாரின்றித் தொங்குகின்றன. அதற்குக் காரணம் மதுரைக்கு வந்து பொருபவரே உல கத்தில் இல்லை. அந்த வாசல் போர் அரிதாகப் போன ©Ꮧ fᎢᎦ© .

மதுரை மாநகரத்தின் பெருவாசல் வீரத்தையும் அமைதியையும் விளக்குகின்றது. உள்ளே புகுந்து பார்த் தால் எத்தனை பெரிய கடைவீதி திருமகள் வீற்றிருக்கும் ஆஸ்தானத்தைப் போல அங்கே செல்வம் பொங்கு கிறது. அதர்ம வழியிலே செல்வத்தை ஈட்டுவார் அங்கே இல்லை. அந்த அங்காடி வீதி தீது தீர்ந்தது; திரு விற் றிருப்பது. அப்பால் போய்ப் பார்த்தால் பல பல விதிகள். எங்கும் செல்வம் நிரம்பிய மாடங்கள் மலிந்திருக் கின்றன. இத்தகைய சிறப்போடுள்ள மாடக் கூடலாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/78&oldid=643653" இலிருந்து மீள்விக்கப்பட்டது