பக்கம்:வழிகாட்டி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் 75

திருப்பரங்குன்றம்

இவ்வாறு வாழ்த்திவிட்டு, "சரி, போய்விட்டு வா' என்று கைகாட்டி விடவில்லை நக்கீரர். இந்த வாழ்த்தைப் பின்னே தாம் சொல்லப் போகிறதற்கு முன்னுரையாகச் சொன்னார். எடுத்தவுடனே விரிவாகக் கூறத் தொடங் கினால் அவ்வளவையும் கேட்டு, 'அப்பாடி! இது யாராலே ஆகும்' என்று, கேட்பவன் மலைத்துப் போனாலும் போகலாம். ஆதலால் அவனைத் தட்டிக் கொடுக்கிறார். இனிமேல் முருகன் எழுந்தருளியிருக் கும் இடங்களை ஒவ்வொன்றாகச் சொல்லப் புகுகிறார். முதலில் மதுரைக்கு மேல் புறத்திலே உள்ள திருப்பரங் குன்றத்தைப் பற்றிச் சொல்கிறார்.

ஏதேனும் ஒர் ஊருக்கு வழி சொல்ல வேண்டு மானால் அந்த ஊருக்கு அருகில் உள்ள பெரிய ஊர் ஒன்றைச் சுட்டிக்காட்டி, அதற்கு இன்ன திக்கில் இருக் கிறது என்று சொல்வது உலக வழக்கு. திருப்பரங்குன்றம் மதுரைக்கு அருகில் உள்ளது. ஆகவே முதலில் மதுரை யின் பெருமையைச் சொல்லி, 'அதற்கு மேற்கே திருப் பரங்குன்றம் இருக்கிறது; அது இயற்கை வளம் செறிந்தது' என்று சொல்ல வருகிறார்.

மதுரை பாண்டிய மன்னர் ஆட்சி செய்யும் தலை நகர். பாண்டியர் பெரு வீரர்கள். அவர்களுடைய வீரத்தை அறிந்து அஞ்சி மன்னர் யாரும் அவர்களோடு போர் புரிய வருவதில்லை. மதுரை மாநகரத்தின் மதில் வாயில் மிகப் பெரியது. வந்து பொரும் பகைவரே இல் லாமையால் போர் இல்லாமல் சமாதானம் நிலவுகின்ற வாயில் அது. அதன்மேல் பாண்டிய அரசனுடைய மீனக் கொடி வானை அளாவி நிமிர்ந்து பறக்கிறது. நெடுந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/77&oldid=643651" இலிருந்து மீள்விக்கப்பட்டது