பக்கம்:வழிகாட்டி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 வழிகாட்டி

இதழ்க்கதவு மெல்லத் திறக்கிறது. விடிந்து விட்டது. காலைப் பசிக்கு உணவு தயாராக இருக்கிறது; அருகிலே உள்ள நெய்தல் மலர்களில் தேன் நிரம்பியிருக்கின்றது; அவற்றில் வண்டுகள் பாய்ந்து கிண்டி ஊதி இன்புறு கின்றன. இதோ சூரியன் உதயமாகிவிட்டது. நெய்தற் கள்ளை உண்டுவிட்டு மேலே பறந்து மலை மேலே உள்ள நீலோற் பல மலர்களை அணுகுகின்றன. கண்ணைப் போல மலர்ந்த அந்த நீல மலர்களில் தங்கி அவை ரீங்காரம் செய்து கொண்டிருக்கின்றன. இந்த ரிங் காரம் எப்போதும் கேட்கும் திருப்பரங்குன்றத்தில் முருகன் எழுந்தருளியிருக்கிறான். அது மட்டும் அன்று, இன்னும் கேள்.

இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக் கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக் கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர் அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் குன்றமர்ந்து உறைதலும் உரியன்; அதாஅன்று. (கரிய சேற்றையுடைய அகன்ற வயலில் விரிந்து மலர்ந்த முள்ளையுடைய தண்டைப் பெற்ற தாமரை மலரில் தூங்கி, விடியற் காலையில் தேன் பரந்த நெய்தல் மலரை ஊதி, சூரியன் உதயம் ஆனவுடன் கண்ணைப் போல மலர்ந்த அழகிய சுனைகளில் உள்ள மலர்களிலே சிறைகளையுடைய வண்டின் அழகிய கூட்டம் ரீங்காரம் செய்யும் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருத்தலையும் உடையவன். அதுவேயன்றி.

இரு - கரிய. எல் பட - சூரியன் உதிக்க. அரி - அழகு. குன்று - திருப்பரங்குன்றம்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/80&oldid=643658" இலிருந்து மீள்விக்கப்பட்டது