பக்கம்:வழிகாட்டி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சீரலைவாய் 97

தென்பால் உகந்தாடும் தில்லைசிற் றம்பலவன் பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடி பெண்கால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர் விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ

என்ற மாணிக்கவாசகர் அமுதவாக்கு இந்தத் தத்துவத்தைச் சொல்கிறது.

முருகன் வள்ளியோடு நகையமர்ந்து வள்ளி கண வனாக இருப்பதனால்தான் எல்லா உலகத்திலும் இன்ப வாழ்வும் இல்லறமும் குறைவின்றி நிகழ்கின்றன. இல்லற இன்பம் உலக முழுவதும் பெருகும்படி அருள் செய்யும் திருக்கோலத்தில், ஒருமுகம் வள்ளியொடு நகையமர் கின்ற கைகளோ இருவகைப் பசியை ஆற்றும் செயல் புரிகின்றன. வயிற்றுப் பசியும் காமப்பசியும் இல்லறத் தால் போகின்றன. அறமும் இன்பமும் ஓங்குகின்றன. வயிற்றுப்பசி போகவும் அறம் ஓங்கவும் பயிர் விளைய வேண்டும். அதற்கு இன்றியமையாதது மழை. நீல நிறத்தையுடைய வானத்திலிருந்து மிகுந்த மழை பொழி யும் படியாக ஒரு கை செய்கின்றது.

இன்ப வாழ்வுக்கு ஆரம்பம் மணம்; மாலை புனைதல் மணக்கோலம். வானத்திலே உள்ள தெய்வ மகளிர் மணமாலை சூடும்படிச் செய்கின்றது மற்றொரு திருக்கரம்.

இவ்விரு கரங்களாலும் மழையும் மணமும் பெருகச் செய்து, அறமும் இன்பமும் பெருகும் இல்வாழ்க்கை நன்கு நடைபெற அருளி, இவ்வின்ப வாழ்க்கையில் தலைசிறந்தவனாக வள்ளியொடு மகிழ்ந்து குலவுகிறான் முருகன்.

வ.க.7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/99&oldid=643701" இலிருந்து மீள்விக்கப்பட்டது