பக்கம்:வழிகாட்டி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 வழிகாட்டி

ஒரு கையை மேலே எடுத்துச் சுழற்றுகின்றான்; மற் றொரு கையால் வேள்விப் பூசைக்குரிய மணியை ஒலிக் கின்றான்.

... ... ... ... ... ...ஒருகை கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப, ஒரு கை பாடின் படுமணி இரட்ட

(ஒரு கையானது கீழே நழுவுகின்ற வளையோடே மேலே சுழல, மற்றொரு கை இனிய ஓசையை யுடையதாகி ஒலிக்கும் மணியை மாறி மாறி ஒலிக்கப் பண்ண.

கொட்ப - சுழல. பாடு-ஒசை.)

இறைவன் உயிர்களுக்குத் திருவருள் புரிந்து இன்பம் தருபவன். அந்த அருளையே இறைவனுடைய சக்தியாக வழிபடுவது மரபு. ஆணும் பெண்ணும் அல்லாத கடவுள் ஆணாகவும் பெண்ணாகவும் உருக்கொண்டு மணம் புரிந்து தேவியும் தேவனுமாக இலங்குவது அருள் திரு விளையாடல். உலகத்தில் இரண்டு வகைச் சக்திகளே ஆணென்றும் பெண்ணென்றும் உருக்கொண்டு நிற் கின்றன. இந்தப் பிரிவு இல்லாமல் ஒரே இனமாக இருந்தால் மேலும் இனப் பெருக்கம் இன்றி ஒழியும். இனப்பெருக்கம் இல்லாவிட்டால் உலக நிகழ்ச்சியும் இல்லை.

ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் உலகத்தில் அந்தக் கூட்டுறவு குன்றாமல் நிகழ வேண்டுமானால் இறைவன் திருவருள் வேண்டும். அவனும் ஆணும் பெண்ணும் சேர்ந்த உருவத்தோடு நின்று அருள் செய் வதால் உலகத்தில் இன்ப வாழ்க்கை இடையீடின்றி கிகழ்ந்து வருகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/98&oldid=643699" இலிருந்து மீள்விக்கப்பட்டது