பக்கம்:வழிகாட்டி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சீரலைவாய் 95

(இரண்டு கரங்கள் வியப்பையும் கருமையையும் உடைய கேடயத்தையும் வேலாயுதத்தையும் வலமாகச் சுழற்ற.

ஐ-வியப்பு. இரு-கரிய. வட்டம்-கேடயம். எஃகுவேல்.)

எஞ்சிய பொருள்களை விளக்கி ஞானக்கொடை வழங்கும் திருமுகத்துக்கு ஏற்றபடி இருகைகள் ஞான முத்திரையைக் காட்டுகின்றன. ஒரு கையை மார் போடே சேர்த்து முத்திரை காட்டி, ஒரு கையை மார் பிலே உள்ள மாலையோடு ஒட்டி வைத்திருக்கிறான் முருகன். இந்த முத்திரையை மோன முத்திரையென்று கூறுவர். 'இறைவன் மோன முத்திரையத்தனாய்த் தானாயே இருந்து காட்ட, ஊமைத் தசும்புள் நீர் நிறைந் தாற்போல ஆனந்த மயமான ஒளி மாணாக்கர்க்கு நிறை தலின், அதற்குரிய மோனமுத்திரை கூறிற்று என்று நச் சினார்க்கினியர் இதை விளக்குவார்.

... . . . . .ஒருகை

மார்பொடு விளங்க ஒருகை

தாரொடு பொலிய. (ஒரு கை திருமார்பில் மோனமுத்திரையோடு விளங்க, மற்றொரு கை மாலையோடு விளங்க.)

வீரம் நிறைந்த முருகன் அசுரசங்காரம் செய்து வெற்றி மிடுக்கோடு களவேள்வி செய்கிறான். அந்தக் குறிப்பையுடைய திருமுகத்தோடு பொருந்திய இருகரங் களில் ஒன்று, தான் அணிந்த தோள் வளையோடு மேலே சுழல, மற்றொரு கரம் மணியை ஒலிக்கிறது. இது களவேள்வி செய்யும்போது அதற்குரிய உத்தரவு இடுகின்ற செயல். நடத்துங்கள், நடத்துங்கள் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/97&oldid=643697" இலிருந்து மீள்விக்கப்பட்டது