பக்கம்:வழிகாட்டி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$84. வழிகாட்டி

காக்கும் பொருட்டு உயர்த்தியது ஒரு கை; இடையிலே வைத்தது ஒரு கை.

உக்கம் - இடை.)

அடியாருக்கு வேண்டிய வரங்களைக் கொடுக்கும் திருமுகத்துக்கு ஏற்ப இரண்டு திருக்கரங்கள் தொழிற் படுகின்றன. முருகன் அடியார்களுக்கு அருள் புரியும் பொழுது யானையின்மேல் ஏறி வருவான். ஆகவே அதற்கு ஏற்ற திருக்கோலத்தில் அக் கைகள் உள்ளன. யானையை ஒட்டும்போது ஒரு கையைத் தன் துடையின் மேலே வைத்துக் கொண்டு, மற்றொரு கையாலே அங் குசத்தைப் பிரயோகம் செய்திருக்கிறான். -

நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயது ஒரு

55}55

அங்குசம் கடாவ ஒருகை

(ஒரு கையானது அங்குசத்தைச் செலுத்த, மற்றொரு கை அழகைப் பெற்ற ஆடையை உடுத்த துடையின்மீதே கிடந்தது.

குறங்கு - துடை அசைஇயது - கிடந்தது. கடாவ - செலுத்த.)

வேத வேள்வியை நிறைவேற்றிக் கொடுக்கும் திரு முகத்தோடு இணைந்த திருக்கரங்கள், அவ்வேள்வியை அழிக்க வரும் அசுரர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டிச் சித்தமாக இருக்கின்றன. கேடயத்தையும் வேற் படையையும் அந்த இரண்டு திருக்கைகளும் சுழற்றிக் கொண்டிருக்கின்றன.

يت (65قق نتي... ... ... ... ... م.. ஐயிரு வட்டமொடு எஃகுவலம் திரிப்ப,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/96&oldid=643694" இலிருந்து மீள்விக்கப்பட்டது