பக்கம்:வழிகாட்டி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சீரலைவாய் S3

அவனது வெம்மை அவ்வளவையும் உலகம் தாங்காது; ஆதலின் அந்த வெம்மையைத் தம்முடைய தவவலிமை யினாலே தாங்கிக் கொண்டு சில முனிவர்கள் சூரி யனுடனே பிரயாணம் செய்து கொண்டிருக்கின்றனராம்.

'நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்

தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக் கால்உண வாகச் சுடரொடு கொட்கும் அவிர்சடை முனிவர்" என்று புறநானூற்றில் அம்முனிவரர் பாராட்டப் பெறு கின்றனர். அவர்களை வேணாவியோர் என்ற பெயரால் வழங்குவரென்று தெரிகின்றது.

அந்த முனிவர்கள் எப்போதும் விண்ணிலே செல்லும் வேலையை மேற்கொண்டிருக்கிறார். சூரியனது வெம்மையைத் தாங்கிக் கொள்கிறார்கள். அதற்குரிய ஆற்றல் தவத்தால் வந்தாலும் விடாமல் இக்காரியத்தைச் செய்ய அந்தத் தவவலி மாத்திரம் போதாது. ஆண்டவன் அருள்வலிமையும் வேண்டும். அவர்களுக்கு அந்தப் பலமும் உண்டு, உலகத்தில் இருள் போக வேண்டு மென்று திருவுள்ளம் கொண்ட முருகன் தன் திருக்கரம் ஒன்றால் அவர்களுக்குப் பலத்தை அருள்கிறான். அவர் களுக்குப் பாதுகாவலாக ஒரு திருக்கரத்தை மேலே ஏந்தி, அதன் இணையாகிய இடத் திருக்கரத்தை இடை யிலே வைத்திருக்கிறான்.

விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒருகை உக்கம் சேர்த்தியது ஒருகை. (ஆகாயத்திலே சூரியனது வெம்மையைத் தாங்கிச் செல்லுகின்ற கடமையையுடைய முனிவர்களைப் பாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/95&oldid=643692" இலிருந்து மீள்விக்கப்பட்டது