பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 எஸ். நவராஜ் செல்லையா

அமெரிக்க வீரன் ராபர்ட், தட்டெறியும் போட்டியில் கலந்துகொள்ள வந்து, இரும்புத்தட்டைத் தூக்கிப் பார்த்த பொழுது 5 பவுண்டுகளுக்கும் குறைவாக இருந்ததைக்கண்டு, ஆச்சரியமடைந்து போனன். எடையோ குறைவு. எறியும்

முறையை அப்பொழுதுதான் பார்க்கிருன்.

ஆகவே, தனக்குத் தெரிந்த முறையில், பிறர் பார்த்து சிரிக்கும் முறையில், தட்டைக் கையில் வைத்து சுற்றிச்சுழற்றி எறிந்த போது, அந்தத் தட்டுப்போய் விழுந்த தூரம் 95 அடி 72 அங்குலமாகும். தட்டெறியும் போட்டியிலே கிரேக்கர் களே கீர்த்தியுடன் திகழ்வார்கள் என்ற எண்ணம், மண்ணுய் போனது கண்டு, கிரேக்கர்கள் கலங்கிப் போய்விட்டனர். இதுவரை ஒரு போட்டியிலும் வெல்லவில்லையே, இதிலும் தோற்றுப் போனேமே என்ற வேதனையில் வீழ்ந்து துடித்

தனர்.

வெற்றி வீரன் போல் வெளியே சென்ற பானகியாடி சுக்கு அந்த அதிர்ச்சியைத் தாங்கமுடியவில்லை. இரண்டாவது இடத்தையே அடைந்தான். ஆனல் அது ராபர்ட்டுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஏதென்ஸ் நகரத்தில்தான் இந்த இரும்புத் தட்டைக் கண்டேன். வெற்றி கொண்டேன். என்று இாண்டு தங்கப்பதக்கங்களை ைவ த் து க் .ெ க ா ன் டு மகிழ்ச்சியின் விகரமாக நின்ருன் ராபர்ட்.

பெரும் பணக்காரன் என்பதால் மட்டும் ராபர்ட் திருப்தி அ ைந்துவி வில்லை. விளையாட்டு வீரன் என்பதிலேயே .ெ Iரு1ை1) கொண்டி ருந்தான். தனது பணச் செலவிலேயே அமெரிக்க பிரதிநிதியாகப் போய், முன்பின் தெரியாத இரும் புத்தட்டு ரியும் போட்டியில் வெற்றிக்கண்டது க ண் டு உலகமே புகழ்ந்து பேற்றியது. 20 பவுண்டு எடையுள்ள இரும்புத் தட்டை எறிந்து பழகிய அ வ் வீ ர னி ன் மனத் திண்மை, இடைவிடா முயற்சி, விளயாட்டின் மேல் இருந்த பற்று இவைகளைப் பார்க்கும்பொழுது, நாமும் உண்மை புடன் முயற்சி செய்தால், வெற்றி பெற முடியும் என்ற நம் பிக்கை பிறக்கிறதல்லவா!

--