பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வெற்றி பெறும்வரை 6ìLIIII' (3LjI!

அமெரிக்க நாட்டின் அழகு நகரமான நியூயார்க் நகரை விட மக்கள் தொகை குறைவான நாடு ஒன்று. பின்லாந்து என்பது அதன் பெயர். அவ்வளவு சிறிய நாட்டிலிருந்து, பத்துக்கும் குறைந்த வீரர்களை 1912ம் ஆண்டு ஒலிம்பிக் பந்தயத்திற்கு அனுப்பி, 6 தங்கப்பதக்கங்களை வென்று புகழ் பெற்றது அந்த நாடு என்ருல், ஆச்சரியமாக மட்டுமல்ல, அது ஒர் அதிசய யமான சாதனைதான்.

அதிலும் அந்த 6 தங்கப் பதக்கங்களில் 3 தங்கப்பதக் கங்களை வென்று தந்த வீரர் ஒருவர் இருந்தார். பெயர் ஹேன்ஸ் கோலிமெய்னன். ஆறடி அங்குல உயரமுள்ள அந்த விரர், 5000,10,000 மீட்டர் மற்றும் நெடுந்துார ஒட்டம் (Cross Country) இவற்றில் பெற்ற .ெ வ ற் றி யும் புகழும் உலகை மட்டும் உலுக்கிவிடவில்லை. அவரது நாட்டிலுள்ள இளைஞர்களிடையிலும் உணர்ச்சிக் கனலை, புரட்சித் தீயை பெருமளவில் மூட்டிவிட்டது.

அத்தகைய சூழ்நிலையில் உணர்ச்சிப்பிழம்பாகி உறுதி யுடன் முன்வந்தான் ஒரு சிறுவன். உலகப்புகழ் பெற்ற ஹேன்ஸ் போல நானும் ஒடி உலகப்புகழ் பெறுவேன் என்று வீர முழக்கமிட்டான். சபதம் செய்தான் தனக்குள்ளேதான், அப்படித்தான். ஆனல் உலகப் புகழ் பெறுவது என்பது எளிதா என்ன?