பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 எஸ். நவராஜ் செல்லையா

வாடிலுைம் வளர்கின்ற அறிவுக்கு வடிவம் தந்திடும் பள்ளி நோக்கிப் போனன் அவன்.

பிறந்ததோ நீக்ரோ குடும்பம். பரம்பரை சொத்து போல வறுமை. கொடிது கொடிது வ று ைம கொடிது. அதனினும் கொடிது இளமையில் வறுமை’ என்பார்களே, அந்த நிலையில் சிறுவன் ப ள் வரி க் கு ப் போனன். மிகவும் வெட்கப்படுபவகை, த ா ழ் வு மனப்பான்மையுள்ளவனாக, எலும்புந் தோலுமாகக் காட்சியளிப்பவனாக அவன் இருப்ப தைக் கண்டு ஆசிரியர்களும் ஆச்சரியப்பட்டார்கள். அவர் களில் ஒருவர் அனுதாப மிகுதியால் அ தி க ம ாக அன்பு காட்டத் தொடங்கினர். இவனது தாழ்வு மனப்பான்மை யை அகற்ற, தன்னம்பிக்கையை ஊட்ட, உடலும் தேற ஒரே வழி, இவனே விளையாட்டுக்களில் சேர்த்துவிடுவதுதான் என்பதே, அந்த ஆசிரியரின் அருமையான திட்டமாக அமைந் தது. உடல் நலம் பெற அவனை அழைத்து வந்து விளையாட் டிலும் ஈடுபடுத்தி விட்டார்.

வறுமை வதைக்கும் பொழுது விளையாட்டில் விருப்பமா கொப்பளிக்கும்? என்ருலும், கூட்டத்துடன் கூட்டமாக, பையன்களுடன் பையனுக, ஒவன்ஸ் ஓடி விளையாடினன். உற்சாகம் பெற்ருன். அவனை அறியாமல் உடல் உறுதி பெற்றுக்கொண்டு வந்ததை அவனும் அறியவில்லை. அவனது ஆசிரியரும் அறியவில்லை.

ஒரு நாள், ஒடு களப்போட்டி நிகழ்ச்சிகளைக் கற்பிக்கும் பயிற்சியாளர் ஒருவர் (Track Coach) ஒவன்சை அழைத்து, 100 கெஜ தூரம் ஒடி வா என்று கட்டளையிட்டு விட்டு, ஒடி முடிக்கின்ற இடத்தில்வந்து நிறுத்துக் கடிகாரத்துடன் (Stop Watch) நின்று கொண்டார். ஆணையைமேற்கொண்ட இவன் ஒடி முடித்த நேரத்தைப் பார்த்த பயிற்சியாளர் அயர்ந்தே போய்விட்டார்.

'இந்தக் கடிகாரம் பழுதடைந்து போய்விட்டது. இதை ரிப்பேர் செய்திட வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.