பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 எஸ். நவராஜ் செல்லையா

என்பவர் அடிக்கடி கூறிவந்த அறிவுரையை ஒவன்ஸ் ஒரு சிறிதும் மீருமலே வாழ்ந்து வந்தான்.

அந்த நிலையில் தான் இரவு நேரங்களில் வேலை செய்தும் பகலில் படித்தும், காலை மாலை நேரங்களில், ஒட்டப் பயிற்சிகள் செய்தும் ஓவன்ஸ் வாழ்ந்து வந்தான். அவன் செய்த வேலையோ லிப்ட் இயக்கும் அலுவலராக. அதாவது மாலை 5 மணிக்குத் தொடங்கி, இரவு 12-30 மணி வரைதொடரும். அதற்குப் பின் உறங்கி, விடியற்காலையில் விளையாட்டு மைதானத்திற்கு வந்துவிடுவான் ஒவன்ஸ்.

அவ்வாறு பயிற்சி செய்துவரும் நாளில், ஆன்ஆர்பர் (Ann arbor) என்னுமிடத்தில், நடக்கின்ற ஒட்டப்போட்டி களில் கலந்துகொள்ள வேண்டுமென்று ஒவன்ஸ் பயிற்சி யாளர் கூறியிருந்தார். அதற்கான ஆயத்தம் செய்து கொண் டிருக்கும் வேளையில் ஒரு நாள் இரவு, அந்த அலங்கோல மான அதிர்ச்சி தரும் நிகழ்ச்சி ஒன்று நடந்துவிட்டது.

இரவு 12-30 மணி. இளைப்பும் களைப்பும் மேலோங்கி இருக்கும்போது, படுத்து உறங்கிட வேண்டும் என்று படுக்கச் சென்ருல், படுக்கையிலே பாம்பு ஒன்று கிடந்தது. எப்படி இருக்கும்? பயத்தால் குழம்பிப்போய், என்ன செய்வது என்று புரியாமல் திகைத்தான் அந்த இளைஞன்.

அச்சம் ஆட்டுவித்த போதிலும், அறிவு வேலை செய்யத் தொடங்கிவிட்டது. எச்சரிக்கையுடன் அருகே சென்று பார்த்தபொழுது அது செத்த பாம்பு என்று தெரியவந்தது. செத்த பாம்பு தன் படுக்கைக்கு எப்படி வந்தது? சிந்தனைகள்

சிதறிச்சென்று சேதிக்காக அலைந்து திரிந்தன. அதன்பின் அவனது யூகம் ஒர் உண்மையை வெளிப்படுத்தியது.

அடிக்கடி யாராவது ஒருவன் ஒவன்சை பயமுறுத்து வதற்காகவும், வேதனைப்படுத்துவதற்காகவும் இவ்வாறு ஏதாவது செய்துவருவது வழக்கம். அப்படிப்பட்டவர்கள் வேலையாகத்தான் இருக்கும் என்று முடிவு கட்டின்ை.