பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


44 --- எஸ். நவராஜ் செல்லையா

பெற்றேர்கள் வந்து இழுத்துக்கொண்டு, சில சமயங்களில் கட்டாயப்படுத்தித் தூக்கிக் கொண்டுப் போ கு ம் வரை தொடர்ந்து சென்றது.

தனது விருப்பம் போல் எல்லாம் அவன் விளையாடிப் பார்த்தான். தனக்கு ஏற்ருற்போல் பந்தாடும் மட்டையைப் பிடித்துக் கொண்டான். இப்படித்தான் ஆடவேண்டும் என்று யாரும் கற்றுத் தராமலேயே, இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலே டென்னிஸ் ஆட்டக்கலையைக் கற்றுக் கொண்டான். குரு இல்லாமல் கலை வ ள ரா து என்ருலும், இடைவிடா பயிற்சி அவனை இணையற்றவகை மாற்றிக் காண்பித்தது. உண்மையான லட்சியம், அவனை உயர்ந்த இடத்திற்கு ஏற்றி வைத்தது.

எந்த சங்கத்தில் அவனுக்கு இடம் இல்லை என்று கை விரித்து அனுப்பினர்களோ, அதேஇடத்தில் அ வ ர் க ேள விரும்பி ஏற்று வரவேற்கும் வகையில் ஆடினன் அந்தசிறுவன். சிரத்தையுடன் தேர்ச்சிப் பெற்ற போர்க்கின் ஆட்டத்தைக் கண்டு, அவர்கள் சிரம் தாழ்த்திச் சேர்த்துக்கொண்டனர்.

சிறுவனின் பேராற்றலைக் கண்டார் ஒரு பயிற்சியாளர், பெர்சி ரோஸ்பெர்க் என்பவர். சிறந்த ஆட்டக்காரர்களைக் கண்டு பிடிக்க முயன்ற அவர் கண்களில், போர்க் சிக்கிக் கொண்டான். அவனை அவர் அழைத்தார். இரண்டு படகு களில் கால் வைத்துப் பயணம் போகின்றவன், எந்தப்பக்க மும் போக முடியாது. படகு விலக விலக பாதையும் மாறும். கால்களின் நிலையும் கிழியும் என்று ஒர் உதாரணத்தைத் தந்தார் அவர்.

வளைகோல்பந்தாட்டத்திலும் டென்னிஸ் ஆட்டத்திலும் ஆசை வைக்காதே. ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடு’ என்று அறிவுரை கூறினர். தெளிவு பெற்ற போர்க், டென்னிஸ் ஆட்டத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டான். பி ன் ன ர் தொடர்ந்து 4 ஆண்டுகள் கடும் பயிற்சி செய்தான்.