பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. நாமென்ன நாட்டுக்கு செய்தோம் !

வளைகோல் பந்தாட்டமா!... இந்திய நாட்டுவீரர் மேஜர் தியான்சந்த், கால் பந்தாட்டமா....! பிரேசில் நாட்டு வீரர் பீலி. டென்னி ல் ஆட்டமா....: ஸ்வீடன் தேசத்து வீரர் ஜோன்பர்க். மாரதான் ஒட்டமா....! எத்தியோப்பியா நாட்டு வீரர் அபீப்பிகிலா. நெடுந்துார ஒட்டமா...!செக்கோசுலோ வோகியா நாட்டு வீரர் எமல் செட்டபெக்.

இ ப் படி ஒவ்வொரு ஆட்டத்திற்கும் ஒட்டத்திற்கும் உலக வீரர்களுக்கிடையே ஒருவர் என்று புகழ் மிகுந்த, நட்சத்திரமாக விளங்கும் வீராதி வீரர்களுக்கு இடையிலே இன்று ஒர் புதிய வீரர், விரைவாக ஒடும் ஆட்டக்காரர் ஒருவர் உலக அரங்கிலே உதயமாகி இருக்கிரு.ர்.

22 வயது நிரம்பிய இளைஞன், பொறியியல் வல்லுநர் ஒருவரின் நான்கு மக்க ளில் ஒருவன், பொருளாதாரப் பாடத் திலே பட்டம் பெற்ற மாணவன், 41 நாட்களுக்குள் எந்த வீரனும் சாதிக்காத சாதனை ஒன்றை சாதித்து, புதிய நேர சாதனையைப் பொறித்து, உலக விளையாட்டு அரங்கை,

சிகப் பெருமக்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிருன்.

'விரைவாக ஒடக் கூடியவர்கள், வல்லமை பெற்றவர் கள், இயற்கை அளித்த இனிய பரிசு இவர்கள் உடலமைப்பு, என்று எல்லாரும் ஏகோபித்த வண்ணம் ஏற்றுக் கொண்ட