பக்கம்:வழிப்போக்கன்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107

"என்ன உன்னுடையதா?"பிரமித்து நின்றான் சுந்தரம், "அப்படியானால் அந்தக் குறவன் உன் வீட்டிலிருந்துதான் கொள்ளையடித்துக் கொண்டு போனன? என்னல் நம்பவே முடியவில்லையே!... சகுந்தலா ! உன் கணவர் இறந்துவிட்டார் -சர்மா ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறார் -இந்த நகைகள் உன்னுடையவை - இவ்வளவும் எனக்குக் கனவாகவே தோன்றுகின்றன!”

"எனக்கும்தான்! இழந்துவிட்ட நகைகளையும் தங்கங் களையும் ஒருங்கே காணும்போது என்னலும் நம்ப முடியவில்லைதான். தங்களை இங்கே சந்தித்ததில் நான் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறேன் தெரியுமா...? சுந்தர்! நாம் இருவரும் சின்ன வயசில் இன்பமாகக் கூடி வாழ்ந்ததையெல்லாம் மறந்துவிட்டீர்களா? ஆற்காட்டில் ஒருநாள் நான் தங்கள் அறைக்கு வந்திருந்தபோது விளக்கை அனைத்துவிட்டு என்னைப் பயமுறுத்தினர்களே. நினைவு இருக்கிறதா?" ஆவல் நிறைந்த விழிகளால் அவனே விழுங்கி விடுவதுபோல் பார்த்தாள் அவள். பசுந் தளிர்மீது நிலவு கொஞ்சுவது போன்ற புன் முறுவல் சகுந்தலாவின் இதழ்களில் நெளிந்து கன்னங்களில் சுழித்துக் குமிழிட்டன.

சலனமற்ற நீர்ப் பரப்பில் ஒரு சிறு கல்லை எறிந்ததும் சிறு வட்டங்கள் தோன்றி அவை பெரிய பெரிய வட்டங்களாக மாறி நீர்ப்பரப்பு முழுவதையுமே அலைத்து விடுகிறது அல்லவா? சகுந்தலாவின் வார்த்தைகள் சுந்தரின் இதயத்தை அலைக்கத் தொடங்கின.

எங்கேயோ பலமாக மழை பெய்து கொண்டிருந்தது. அதை உணர்த்துவதுபோல், ஜன்னல் வழியாக வீசிய சில்லென்ற மழைக் காற்று சுந்தரையும் சகுந்தலாவையும் மெய் சிலிர்க்கச் செய்தது.

"விதி நம் இருவரையும் பிரித்துவிட்டு வேடிக்கை பார்க்கிறது, சுந்தர்!" என்றாள் சகுந்தலா.

" நீ என்ன சொல்கிறாய், சகுந்தலா...?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/107&oldid=1313629" இலிருந்து மீள்விக்கப்பட்டது